அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 141* ||
அத்தியாயம் 14 – இப்ராஹீம் (இறைத்தூதர்களில் ஒருவர்) 11-20
1) *அல்லாஹ்வுக்கு லேசானதாக* எதைக் கூறுகிறான்.
*புதிய படைப்பை கொண்டுவருவது அல்லாஹ்வுக்கு லேசானது*.
அவன் நாடினால் உங்களைப் போக்கிவிட்டு, ஒரு புதிய படைப்பைக் கொண்டு வருவான். (14:19)
2) *துன்பங்களின் போது பொருத்து கொண்ட நபிமார்கள், எந்த நிலையில் அல்லாஹ்விடம் உதவி தேடினார்கள்*?
*ஊரிலிருந்து உங்களை வெளியேற்றுவோம்; அல்லது எங்கள் மார்க்கத்திற்கு நீங்கள் திரும்ப வேண்டும்”* என்று இறைமறுப்பாளர்கள் அல்லாஹ்வின் தூதர்களிடம் கூறியபோது
நபிமார்கள், அல்லாஹ்விடம் உதவி தேடினார்கள். (14 :14,15)
___________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*