அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 139* ||
19 அத்தியாயம் 13 அர்ரஃது ( இடி ), வசனம் 31- 40 வரை.
1) தூதரின் கடமையெல்லாம்,
a ) எடுத்துரைப்பதும் , விசாரிப்பதும்
b ) எடுத்துரைப்பது.
c) விசாரிப்பது.
( சரியான விடையை ஆதர எண்ணுடன் குறிப்பிடவும்)
2) எல்லா நபிமார்களுக்கும் எதை வழங்கி இருந்ததாக அல்லாஹ் கூறுகிறான்?
////////////////////////////////////////////////
*பதில்கள்…..*
1) *தூதரின் கடமையெல்லாம்*,
b ) *எடுத்துரைப்பது*. (13:40)
(அவர்களுக்கு நாம் எச்சரித்ததில் சிலவற்றை உமக்குக் காட்டினாலும் அல்லது (அதற்கு முன்பே) உம்மை நாம் கைப்பற்றினாலும் (அதைப்பற்றிக் கவலைப்படாதீர்!) எடுத்துரைப்பதே உமக்குக் கடமை. விசாரிப்பது நமது பொறுப்பாகும்.)
2) *எல்லா நபிமார்களுக்கும் எதை வழங்கி இருந்ததாக அல்லாஹ்* கூறுகிறான்?
*அவர்களுக்கு மனைவியரையும், பிள்ளைகளையும் ஏற்படுத்தினோம்*. (13:38)
________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*