அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 138* ||
19 அத்தியாயம் 13 அர்ரஃது ( இடி ), வசனம் 21- 30 வரை.
1) *ஸலாமுன் அலைக்கும்* என யார்? எதற்க்காக கூறுவார்கள்?
*மலக்குமார்கள்*
வசனம் 20,21,22 ஆகியவற்றில் சொல்லபட்ட விசயங்களில் பொறுமையை மேற்கொண்டதால் அவர்களுக்கு ஸலாமுன் அலைக்கும் என மலக்குமார்கள் கூறுவார்கள் ( 13: 24)
2) *அல்லாஹ்வை திக்ரு செய்வதால் என்ன பயன் கிடைக்கிறது*?
*உள்ளங்கள் நிம்மதியடைகிறது* (13:28)
3) *உறவுகளை துண்டித்து வாழ்பவர்களுக்கு* என்ன ஏற்படும்?
அவர்களுக்கே *சாபம்* உள்ளது. அவர்களுக்கு மறுமையில் கேடு உள்ளது.(13:25)
*கூடுதல் தகவல்:*
நமக்கு நல்ல செல்வ செழிப்பு, நீண்ட ஆயுள் வேண்டும் என்றால் உறவை போண வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
*தமது வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தமது உறவைப் பேணிவாழட்டும்.*
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.( புகாரி 5985)
_______________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*