அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 134* ||
அத்தியாயம் [ *12 யூஸூஃப் (இறைத்தூதர்களில் ஒருவர்* ), வசனம் 101- 110 வரை.]
1) *மனிதர்களில் பெரும்பாலோர் எப்படித்தான் இருப்பார்கள்*?
*இறைநம்பிக்கை கொள்வோராக இல்லை*. (12:103)
அவர்களில் அதிகமானோர் *இணைவைத்தோராகவே தவிர அல்லாஹ்வின்மீது நம்பிக்கை கொள்வதில்லை*. (12:106)
2) நபி (ஸல் ) அவர்களும் அவரை பின்பற்றுவோரும் *எத்தகைய ஆதாரத்தில் உள்ளார்கள்*?
*தெளிவான ஆதாரத்தின்மீது* ( 12:108)
3) *யூஸுப் நபி கேட்ட பிரார்த்தனை* என்ன ?
*என் இறைவனே! எனக்கு ஆட்சியதிகாரத்தை வழங்கினாய். (கனவுச்) செய்திகளின் விளக்கத்தையும் எனக்குக் கற்றுத் தந்தாய்!*
*வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவனே! இவ்வுலகிலும், மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்.*
*முஸ்லிமாகவே என்னைக் கைப்பற்றுவாயாக! நல்லவர்களுடன் என்னைச் சேர்ப்பாயாக!* (12:101)
*ஃபாதிரஸ் ஸமாவாத்தி வல் அர்ளி,*
*அன்த வலிய்யீ ஃபித்துன்யா வல்ஆகிரா, தவப்பனி முஸ்லிமவ், வஅல்ஹிக்னீ பிஸ் ஸாலிஹீன்*
மிக எளிமையான துவா *மனப்பாடம் செய்வோம்.*
_____________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*