அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 130* ||

அத்தியாயம் *12 யூஸூஃப் ( இறைத்தூதர்களில் ஒருவர்* ), வசனம் 51- 60 வரை.

1) யூஸுப் நபிக்கு மன்னர் என்ன பதவி கொடுப்பதாக கூறினார் ? ஆனால்  யூஸுப் நபி எந்த பதவியை கேட்டு பெற்றுகொண்டார்?

*மன்னர்க்கான தனி அலுவலராக* (12:54)

*நாட்டின் கருவூலங்(கஸானா)களுக்குப் பொறுப்பாளராக* (12:55)

( *கூடுதல் தகவல்*: யூஸூப் நபி அவர்கள் வெறுமனே பதவி கேட்கவில்லை, *நான் பாதுகாப்பவன் , நன்கறிந்தவன்* என்ற கூடுதல் உறுதிமொழி அளித்து கேட்டார்கள்)

2) *யூஸுஃப் நபி பற்றி அமைச்சரின் மனைவி மற்றும் பெண்கள் என்ன கூறினார்கள்?*

(51-52) மன்னர், “*யூஸுஃபை நீங்கள் அடைய முயன்றபோது உங்களுக்கு நேர்ந்தது என்ன?*” என்று கேட்டபோது,

பெண்கள், “*அல்லாஹ் தூய்மையானவன்! அவரிடம் எந்தக் கெட்ட செயலையும் நாங்கள் அறியவில்லை*” என்று பதிலளித்தனர்.

அப்பெண்கள் *யூஸுஃப் நபியின் கற்பையும் நற்குணத்தையும் உறுதிப்படுத்தினார்கள்*.

பின்னர், அமைச்சரின் மனைவி உண்மையை ஒப்புக்கொண்டு, “*நான்தான் அவரை அடைய முயன்றேன். அவர் உண்மையாளர்*” என்று கூறினாள்.

__________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *