*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 13* ||
[ஆலு இம்ரான் (அத்தியாயம் *3* வசனங்கள் *141-150* வரை)]
A) *எந்த குர்ஆன் வசனத்தை* அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) ஓதி காட்டி *நபிகளார் மரணத்தை அம்மக்களுக்கு உறுதி செய்தார்கள்*?
B) அல்லாஹ்வை யாரெல்லாம் மறுக்கின்றார்களோ, அத்தகைய *நிராகரிக்கும் கூட்டத்திற்கு எதிராக நாம் செய்ய வேண்டிய பிரார்த்தனை* என்ன?
C) *சொர்க்கத்திற்கு செல்ல* அல்லாஹ் வைக்கும் தேர்வு என்ன?
______________________
A) அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூ பக்ர்(ரலி) இவ்வசனத்தை அங்கு ஓதிக்காட்டும் வரை அல்லாஹ் *இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போன்றும் அபூ பக்ர்(ரலி) மூலமாகத்தான் இதையவர்கள் அறிந்ததைப் போன்றும்* அங்கிருந்த ஒவ்வொருவரும் இதனை ஓதிக் கொண்டிருந்தார்கள்….(புகாரி 1242)
*முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா*? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான். (3:144)
______________________
B) *எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும், எங்கள் செயல்களில் நாங்கள் வரம்பு மீறியவற்றையும் எங்களுக்கு மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இறைமறுப்பாளர்களின் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக*!
C) *அல்லாஹ்வுக்காக போர் செய்பவர்கள் யார் ? & துன்பங்களைப் பொறுமையுடன் சகித்துக் கொள்பவர்கள் யார்*? என்று சோதித்து அறிதலே அந்த தேர்வு
*உங்களில் போரிடுவோர் யார் என அல்லாஹ் வெளிப்படுத்திக் காட்டாமலும், பொறுமையாளர்கள் யார் என வெளிப்படுத்திக் காட்டாமலும் நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்துவிடலாம்* என எண்ணிக் கொண்டீர்களா? (3:142)
______________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*