அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 127* ||
அத்தியாயம் *12 யூஸூஃப் ( இறைத்தூதர்களில் ஒருவர்* ), வசனம் 21- 30 வரை.
1) *உண்மையை அறிந்து கொண்ட அமைச்சர்*, யூஸுப் நபியிடம் கூறியது என்ன?
(12:29) அமைச்சர், யூஸுஃப் நபியிடம், “*இதை விட்டு விடுவீராக*!” என்று கூறினார்.
இதில் “*இதை*” என்பது….
அமைச்சரின் மனைவி யூஸுப் நபி அவர்களை அடைய முயன்றவை, பின்னர் அந்த நிகழ்வை மறைக்கவும், *யூஸுப் நபியிடம் மீது பழிசுமக்கவும் செய்த முயற்சிகளை அமைச்சர் உணர்ந்த பிறகு, இந்த விஷயத்தை பேசாமல் விட்டுவிடுமாறு* யூஸுப் நபியிடம் அவர்களிடம் கூறினார்.
2 ) *யூஸுஃப் நபியை வசதியான இடத்தில் அல்லாஹ் சேர்த்ததற்க்கான காரணம்* என்னவென்று கூறுகிறான்?
(12:21) *கனவுகளின் விளக்கத்தை கற்றுக்கொடுப்பதற்காக.*
__________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*