அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 125* ||
அத்தியாயம் *12 யூஸூஃப் ( இறைத்தூதர்களில் ஒருவர்* ), வசனம் 01- 10 வரை.
1) *யூஸுஃப் நபிக்கு அவரின் சகோதர்கள்* என்ன காரணத்திற்காக தீங்கிழைத்தார்கள்?
*தங்களைவிட யூஸுஃபும், அவரது சகோதரருமே நமது தந்தைக்கு மிகப் பிரியமானவர்களாக உள்ளார்களே* என்ற தவறான எண்ணம் ( ஈகோ)தான் காரணம்.
“நாம் ஒரு கூட்டமாக இருக்கும் நிலையிலும், *நம்மைவிட யூஸுஃபும், அவரது சகோதரருமே நமது தந்தைக்கு மிகப் பிரியமானவர்களாக இருந்தவயே*” (12:08)
2) யூஸுஃப் நபிக்கு எவைகள் தனக்கு பணிபவையாக கனவு கண்டார்?
( 11:4) *பதினொரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும்* கணவில் தனக்கு பணிபவையாகக் கண்டார்
3) இஸ்ஹாக் நபி யூஸுஃப் நபிக்கு என்ன உறவு முறை வேண்டும்?
*தந்தையின் தந்தை* – பாட்டனார்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கண்ணியத்திற்குரியவரின் மகனான கண்ணியத்திற்குரியவரின் மகனான கண்ணியத்திற்குரியவரின் மகனே கண்ணியத்திற்குரியவர் ஆவார். அவர் (யாரெனில்), *இப்ராஹீம் (அலை) அவர்களின் மகனான இஸ்ஹாக் (அலை) அவர்களின் மகனான யஅகூப் (அலை) அவர்களின் மகனான யூஸுஃப் (அலை) அவர்களேயாவார்.*
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்கள்: புகாரி (4688), அஹ்மத் (5454)
_______________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*