அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 121* ||
அத்தியாயம் 11 ஹூது ( இறைத்தூதர்களில் ஒருவர் ), வசனம் 81- 90 வரை.
1 ) *சொல் ஒன்று செயல் வேறாக இருக்க கூடாது* என்பதை வலியுறுத்தும் வசனம் எது?
(11:89) *எதை விட்டும் உங்களைத் தடுக்கிறேனோ அதில் உங்களிடம் மாற்றமாக நடப்பதற்கு நான் விரும்பவில்லை.*
2 ) *மத்யன்வாசிகள் எவ்வாறு வாழ விரும்பினார்கள்?*
(11:87) *தங்கள் முன்னோர்கள் வணங்கிய கடவுள்களை வணங்க விரும்பினார்கள்*
*தங்கள் செல்வங்களை தாங்கள் விரும்பியபடி பயன்படுத்த விரும்பினார்கள்*
3 ) *வசதியான நிலையிலும் ஷுஐப் ( அலை) சமுகத்தினர் செய்த மோசடி* என்ன ?
(11:85) *அளவிலும் நிறுவையிலும் குறைவை ஏற்படுத்தினார்கள்*
*மக்களுக்கு அவர்களுக்குரிய பொருட்களை குறைத்து கொடுத்தார்கள்*
______________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*