அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 120* ||

அத்தியாயம் 11 ஹூது ( இறைத்தூதர்களில் ஒருவர் ), வசனம் 71- 80 வரை.

1 ) *இப்ராஹீம் நபி அவர்கள் யாஃகூப் நபிக்கு* என்ன உறவு முறை?

A ) சகோதரர்

B) தந்தை

C) பாட்டனார்

( ஆதாரமாக வசன எண் குறிப்பிடவும்)

பதில்.

இப்ராஹீம் நபி அவர்கள் யாஃகூப் நபிக்கு *பாட்டனார் (C)* ஆவார்கள்.

ஆதாரம்: (11: 71)ல் “*அவருக்கு இஸ்ஹாக்கைப் பற்றியும், இஸ்ஹாக்கிற்குப் பின் யஃகூப் பற்றியும் நற்செய்தி கூறினோம்*” என அல்லாஹ் கூறுகிறான். எனவே இதில் இப்ராஹீம் நபிக்கு இஸ்ஹாக் மகனாகவும், இஸ்ஹாக்கிற்கு யஃகூப் நபி மகனாகவும் இருப்பதால், *இப்ராஹீம் நபி யஃகூப்  நபியின் பாட்டனார்* ஆவார்கள்.

2 ) *தனது  சமுதாயத்தவர்களின் தவறை தடுக்க* லூத் நபி எதை எதிர்பார்த்தார்கள்?

லூத் நபி தனது சமுதாயத்தவர்களின் தவறை தடுக்க:

*வலிமையான ஆதரவாளர்கள்* (பலமான குடும்பம்/உறவினர்கள்)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி (3387), முஸ்லிம் (4725)

ஆகியவற்றை எதிர்பார்த்தார்கள் என்பது (11: 80) ல் “*உங்கள் விஷயத்தில் எனக்கு வலிமை இருந்திருக்க வேண்டுமே*! அல்லது *வலிமையான ஆதரவை நான் பெற்றிருக்க வேண்டுமே!*” என்ற அவரது கூற்றின் மூலம் தெரிய வருகிறது.

________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *