*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 12* ||
[ஆலு இம்ரான் (அத்தியாயம் *3* வசனங்கள் *131-140* வரை)]
A)இந்த வசனத்தை (*3:133*) ஓதி காட்டிய போது *நானும் சொர்க்கவாசிகளில் ஒருவனாக இருக்க ஆசைப்படுகிறேன்* என்று அல்லாஹ்வின் தூதரிடம் கூறிய நபித்தோழர் யார்?
B) அல்லாஹ்வின் *அருள் கிடைக்க நாம்* என்ன செய்ய வேண்டும்?
C) كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِيْنَ
இந்த வசனம் யாரைக் குறித்து எச்சரிக்கின்றது?
D) *சோதனை ஏற்படும் போது அல்லாஹ்* கூறும் அறிவுரை என்ன?
_____________________________
A) *உமைர் பின் அல்ஹுமாம்* அல்அன்சாரீ (ரலி) அவர்கள் (*முஸ்லிம் 3858)*
_____________________________
B) *அல்லாஹ்விற்கும் அவனது தூதர்களுக்கும் கட்டுப்படுவதின்* மூலம் இறை அருளை பெற முடியும்
*அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்*! இதனால் நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்.(3:132)
_____________________________
C) இறை வசனங்களைப் (*அல்லாஹ்வின் சட்டதிட்டங்களையும், அறிவுரைகளையும்*) பொய் கூறியவர்களின் இறுதி முடிவு பற்றி எச்சரிக்கின்றது.
உங்களுக்கு முன்னர் பல வழிமுறைகள் கடந்துவிட்டன. நீங்கள் பூமியில் பயணித்து, *பொய்யெனக் கூறியோரின் முடிவு* எப்படி இருந்தது என்பதைக் கவனியுங்கள். (3:137)
_____________________________
D) சோதனை ஏற்படும்போது *மனம் தளராமலும் கவலை படாமலும் இறையச்சத்தோடு அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை வைத்து உறுதியாக இருக்க வேண்டும்*
*தளர்ந்து விடாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! நம்பிக்கை கொண்டிருந்தால்* நீங்களே உயர்ந்தவர்கள். (3:139)
_____________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*