அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 117* ||
அத்தியாயம் *11 [ஹூது (இறைத் தூதர்களில் ஒருவர்* வசனம் 41- 50 வரை]
1) *நபி நூஹ் (அலை) அவர்கள் நம்பிக்கையாளர்களுடன் சென்ற கப்பல்* இறுதியில் நிலை கொண்ட பாதுகாப்பான இடம் எது ?
கப்பல், *ஜூதி எனும் மலையில்* அல்லாஹ்வின் கட்டளைக்கு ஒப்ப நிலை கொண்டது (11:44).
2) *நபி நூஹ் (அலை) அவர்கள் தாம் அறியாத ஒன்றைக் குறித்துத் தம் இறைவனிடத்தில் கேட்டதை நினைத்து மறுமையில் வெட்கப்படுவடுவதாக* கூறியது எது? அதற்காக அவர் செய்த பிராத்தனை என்ன?
//நபி நூஹ் (அலை) அவர்கள் அறியாத ஒன்றைக் குறித்துத் தம் இறைவனிடத்தில் கேட்டது//
இறைவன், *நபி நூஹ் (அலை) அவர்களுக்கும், அவரின் குடும்பத்தாருக்கும், அவருடன் இருந்த இறைநம்பிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பு* அளிப்பதாக வாக்களித்தான்.
ஆனால், *இறைமறுப்பாளனாக இருந்த நபி நூஹ் (அலை) அவர்களின் மகனும் அழிக்கும் வெள்ளப் பேரழிவில், இறை மறுப்பாளர்களுடன் சேர்ந்து அழிந்தான்*.
அவருடைய மகன் தனக்குரிய குடும்பத்தினருள் ஒருவனே என நபி நூஹ் (அலை) கருதி, இறைவனிடம் அவனை காப்பாற்றுமாறு வேண்டினார்கள்.
அதற்கு இறைவன், “*அவன் உன் குடும்பத்தினருள் ஒருவனல்ல; அவன் தீயச் செயலில் ஈடுபட்டவன்*” என அறிவித்தான்.
நபி நூஹ் (அலை) இறைவனிடம் பிரார்த்தனை:
“*என் இறைவனே! எனக்கு பற்றிய அறிவு இல்லாததை உன்னிடம் கேட்பதை விட்டும், உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். நீ என்னை மன்னித்து, எனக்கு அருள் புரியாவிட்டால், நஷ்டமடைந்தோரில் ஆகி விடுவேன்*.” (11:47).
//*நாம் அறிந்த பாடம்:*//
இறைநம்பிக்கையில்லா ஒருவன்,இரத்த உறவினாக இருந்தாலும், இறைநம்பிக்கையாளர்களின் குடும்பத்திற்குரியவன் ஆக மாட்டான். இந்த சம்பவம், இறைநம்பிக்கை மட்டுமே உயர்ந்த உறவாகும் என்பதற்கும், இறைமறுப்பின் முடிவு எவ்வாறு இருக்கும் என்பதற்கும் மிகப் பெரிய பாடமாகும்
3) மறுமை நாளில் இறைநம்பிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களிலிருந்து விடுபடுவதற்கு என்னவெல்லாம் செய்ய முயர்ச்சிப்பார்கள்?
மறுமை நாளில் இறைநம்பிக்கையாளர்கள் ஒன்றுகூடி, “*(நமக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களிலிருந்து நம்மைக் காக்கும்படி யார் மூலமாவது) நம் இறைவனிடம் நாம் மன்றாடினால் (எவ்வளவு நன்றாயிருக்கும்!)*” என்று (தங்களிடையே) பேசிக் கொள்வார்கள்.
பிறகு, அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் வந்து, “*நீங்கள் மனிதர்களின் தந்தையாவீர்கள். அல்லாஹ், தன் கையால் உங்களைப் படைத்தான். தன்னுடைய வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியச் செய்தான். மேலும், உங்களுக்கு எல்லாப் பொருள்களின் பெயர்களையும் கற்றுத் தந்தான். எனவே, இந்த(ச் சோதனையான) கட்டத்திலிருந்து எங்களை விடுவிப்பதற்காக உங்களுடைய இறைவனிடத்தில் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்$” என்று சொல்வார்கள்.
அதற்கு ஆதம் (அலை) அவர்கள், “(*நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை*” என்று கூறிவிட்டு, தாம் புரிந்த பாவத்தை நினைத்துப் பார்த்து வெட்கப்படுவார்கள். “*நீங்கள் (நபி) நூஹ் அவர்களிடம் செல்லுங்கள். ஏனென்றால், அவர் (எனக்குப் பின்) பூமியிலுள்ளவர் களுக்கு அல்லாஹ் அனுப்பிவைத்த (முக்கிய) தூதர்களில் முதலாமவர் ஆவார்*” என்று சொல்வார்கள்.
உடனே, இறைநம்பிக்கையாளர்கள் நூஹ் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவரும், “(*நீங்கள் நினைக்கும்) அந்நிலையில் நான் இல்லை*” என்று கூறிவிட்டு, தாம் அறியாத ஒன்றைக் குறித்துத் தம் இறைவனிடத்தில் கேட்டதை நினைத்து வெட்கப்படுவார்கள்.
பிறகு, *நீங்கள் கருணையாளனின் உற்ற நண்பரிடம் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்லுங்கள்*” என்று சொல்வார்கள்.
உடனே, இறைநம்பிக்கையாளர்கள் (இப்ராஹீம் -அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்களும், “(*நீங்கள் நினைக்கும்) அந்நிலையில் நான் இல்லை. அல்லாஹ் உரையாடிய, தவ்ராத்(வேதத்)தையும் அளித்த அடியாரான (நபி) மூசாவிடம் நீங்கள் செல்லுங்கள்*” என்று சொல்வார்கள்.
உடனே, அவர்கள் மூசா (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்கள், “(*நீங்கள் நினைக்கும்) அந்நிலையில் நான் இல்லை*” என்று கூறிவிட்டு, (*தம் வாழ்நாளில் ஒருமுறை) எந்த உயிருக்கும் ஈடாக இல்லாமல் ஒரு (மனித) உயிரைக் கொன்றதை நினைவு கூர்ந்து தம் இறைவனுக்கு முன் வெட்கப்படுவார்கள்*.
பிறகு, “*நீங்கள் அல்லாஹ்வின் அடியாரும், அவனுடைய தூதரும், அவனுடைய வார்த்தையும், அவனுடைய ஆவியுமான (நபி) ஈசாவிடம் செல்லுங்கள்*” என்று சொல்வார்கள். (அவ்வாறே அவர்கள் செல்ல,) அப்போது அவர்களும், “(*நீங்கள் நினைக்கும்) அந்நிலையில் நான் இல்லை. நீங்கள் முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அடியாரான முஹம்மத் (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்*” என்று சொல்வார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (4476).
____________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*