அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 115* ||
*அத்தியாயம் 11 [ஹூது (இறைத் தூதர்களில் ஒருவர் வசனம் 21- 30 வரை]
1 ) *உண்மையாகவே அவர்கள்தான் மறுமையில் மிகவும் நஷ்டமடைந்தவர்கள்* என்று அல்லாஹ் யாரை குறிப்பிடுகிறான்?
(11:22) *அல்லாஹ்வின்மீது பொய்யைப் புனைந்து கூறுபவர்கள்*
உண்மையாகவே அவர்கள்தான் மறுமையில் மிகவும் நஷ்டமடைந்தவர்கள்.
2 ) *யார் சொர்க்காவாசிகள்* ?
(11:23) *இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்து, தமது இறைவனுக்கு பணிந்து நடப்பவர்கள்* சொர்க்கவாசிகள்.
3 ) *நூஹ் நபி* அவர்கள் தனது சமுதாயத்திடம் என்ன கூறினார்?
(11:25,26) நூஹை, அவரது சமுதாயத்திற்குத் தூதராக அனுப்பினோம். *அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என நான் உங்களுக்குப் பகிரங்கமாக எச்சரிப்பவன். உங்கள்மீது துன்புறுத்தும் நாளின் வேதனை (ஏற்படுவது) குறித்து நான் பயப்படுகிறேன்*” (என்று அவர் கூறினார்.)
(11:28) *என் சமுதாயத்தினரே! எனது இறைவனிடமிருந்து வந்துள்ள தெளிவான சான்றில் நான் இருந்து, அவன் தனது அருளை எனக்கு வழங்கியிருந்து, அது உங்களுக்கு மறைக்கப்பட்டால், நீங்கள் அதை வெறுப்போராக இருக்கும் நிலையில் அதை உங்களுக்கு நாங்கள் வற்புறுத்த முடியுமா? என்பதைச் சிந்தித்தீர்களா*?” என்று அவர் கேட்டார்.
(11:29) *என் சமுதாயத்தினரே! இதற்காக உங்களிடம் நான் எந்தப் பொருளாதாரத்தையும் கேட்கவில்லை. எனது கூலி அல்லாஹ்விடமே உள்ளது. இறைநம்பிக்கை கொண்டோரை நான் விரட்ட மாட்டேன். அவர்கள் தமது இறைவனைச் சந்திக்கக் கூடியவர்கள். மாறாக, உங்களை அறிவற்ற சமூகமாகவே காண்கிறேன்*
______________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*