|| *கேள்வி 114* ||
*அத்தியாயம் 11 [ஹூது (இறைத் தூதர்களில் ஒருவர் வசனம் 11- 20 வரை]
1 ) மன்னிப்பும், பெரும் கூலியும் யாருக்கு உண்டு?
(11:11) *பொறுமையை மேற்கொண்டு, நற்செயல்கள் செய்வோருக்கே* மன்னிப்பும், பெரும் கூலியும் உண்டு.
2 ) இவ்வுலக வாழ்வை விரும்புபவர்களுக்கு என்ன கிடைக்கும் ?
(11:15-16) *இவ்வுலகில் அவர்களின் செயல்களுக்கான கூலி முழுமையாக கிடைக்கும்*
*மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவும் கிடைக்காது*
*அவர்களின் செயல்கள் அனைத்தும் வீணாகிவிடும்*
3 ) *யார் நரகவாசிகள்* என்று நபி(ஸல்) குறிப்பிடுகிறார்?
(11: 16) அக்கூட்டத்தாரில் *யார் இதை (குர்ஆனை) மறுக்கிறார்களோ* அவர்களுக்கு நரகமே வாக்களிக்கப்பட்ட இடமாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஹம்மதின் உயிர் யாருடைய கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! இந்த(இறுதி)ச் சமுதாயத்திலுள்ள யூதரோ கிறிஸ்தவரோ யாரேனும் ஒருவர் *என்(மார்க்கத்தி)னைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகும்கூட நான் கொண்டுவந்த (மார்க்கத்)தை நம்பிக்கை கொள்ளாமல் இறந்துவிட்டால்*, அவர் *நரகவாசிகளில் ஒருவராகவே இருப்பார்*.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்: 240)
4 ) (11:17 ) வசனத்தில் எந்த கூட்டதினரைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகிறான் ?
“அக்கூட்டத்தார்” என்பது *இஸ்ராயீலின் வழித்தோன்றல்களான யூத, கிறித்தவர்களைக்* குறிப்பதாகும்.
5 ) *மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்குமிடையே நடைபெறும் இரகசியப் பேச்சு* என்ன?
நான் இப்னு உமர் (ரலி) அவர்களுடைய கையைப் பிடித்தபடி அவர்களுடன் சென்று கொண்டிருந்தபோது ஒரு மனிதர் குறுக்கிட்டு, *“(மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனது அடியார்களுக்குமிடையே நடைபெறும்) இரகசியப் பேச்சு பற்றி அல்லாஹ்வின் தூதரிடமிருந்து என்ன செவியுற்றீர்கள்*?” என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது.
*அல்லாஹு தஆலா முஃமினைத் தன் பக்கம் நெருங்கச் செய்து, அவன்மீது தன் திரையைப் போட்டு அவனை மறைத்து விடுவான்.
பிறகு அவனை நோக்கி, “*நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா? நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா?’* என்று கேட்பான்.
அதற்கு அவன், “*ஆம், என் இறைவா*!” என்று கூறுவான். (இப்படி ஒவ்வொரு பாவமாக எடுத்துக் கூறி) அவன் (தான் செய்த) எல்லாப் பாவங்களையும் ஒப்புக் கொள்ளச் செய்வான்.
அந்த முஃமின், ‘*நாம் இத்தோடு ஒழிந்தோம்*’ என்று தன்னைப் பற்றிக் கருதிக் கொண்டிருக்கும் போது இறைவன்,
“*இவற்றையெல்லாம் உலகில் நான் பிறருக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்து விடுகிறேன்*” என்று கூறுவான்*. அப்போது அவனது நற்செயல்களின் பதிவேடு அவனிடம் கொடுக்கப்படும்.
நிராகரிப்பாளர்களையும், நயவஞ்சகர்களையும் நோக்கி சாட்சியாளர்கள், “*தமது இறைவன்மீது பொய்யுரைத்தவர்கள் இவர்கள்தான்*!” என்று சாட்சியாளர்கள் கூறுவார்கள். *அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் சாபம் அநியாயக்காரர்கள்மீது உள்ளது*” என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்.
அறிவிப்பவர்: ஸஃப்வான் பின் முஹ்ரிஸ், நூல்கள்: புகாரி (2441), முஸ்லிம்(5345)
__________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*