அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 113* ||
*அத்தியாயம் 11 [ஹூது (இறைத் தூதர்களில் ஒருவர் வசனம் 1- 10 வரை]*
1) *அல்லாஹ்விடம் இருந்து நாம் செய்கின்ற எதுவும் மறையாது* என்பதை கூறும் வசனம் எது?
(11:5) “அறிந்து கொள்ளுங்கள்! அவர்கள் தமது *ஆடைகளால் போர்த்திக் கொண்டாலும் அவர்கள் மறைப்பதையும், பகிரங்கப்படுத்துவதையும் அவன் அறிகிறான்*. உள்ளங்களில் உள்ளவற்றை அவன் நன்கறிந்தவன்.”
2) *அனைத்து உயிரினங்களின் விவரங்களும் (உணவு, வசிப்பிடம், மரணிக்கும் இடம்) எங்கு பதிவுசெய்யப்பட்டுள்ளன* அல்லாஹ் கூறுகிறான்?
(11:6) *அனைத்தும் தெளிவான ஏட்டில் உள்ளன”.*
3) *மரணத்திற்குப் பின்பு உள்ள வாழ்க்கை பற்றி இறை மறுப்பாளர்களின்* கூற்று என்ன?
(11:7) *இது பகிரங்கமான சூனியத்தைத் தவிர வேறில்லை* என்று கூறுகின்றனர்.
4) *அல்லாஹ்வால் இந்த உலகம் எப்படி உருவாக்கப்பட்டது* என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
(11:7) *வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். அவனது அர்ஷ் தண்ணீரின்மீது இருந்தது”.*
5) *மனிதன் எப்போது நன்றி கெட்டவனாகிறான்* என அல்லாஹ் கூறுகிறான்?
(11:9) “*நமது அருளை மனிதனுக்குச் சுவைக்கச் செய்து, பின்னர் அதை நாம் பறித்து விட்டால், அவன் விரக்தியடைந்து, நன்றி கெட்டவனாகி விடுகிறான்*”.
_________ _________ _________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*