அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 111* ||

*அத்தியாயம் 10 [யூனுஸ் (இறைத் தூதர்களில் ஒருவர் வசனம் 91- 100 வரை]*

1) *தூதர் எச்சரித்த வேதனை வரும் முன்னரே* அத்தூதரை ஏற்றுக்கொண்டு தண்டனிலிருந்து *தப்பித்த சமூகத்தார்* யார்?

(10:98) *யூனுஸ் நபியின் சமுதாயம்*. அவர்கள் இறைவனின் தண்டனையின் அறிகுறியைப் பார்த்தவுடன் திருந்தி இறைவனை ஏற்றுக்கொண்டதால் தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டனர்

2) ஃபிர்அவ்னின் *ஷஹாதா* அவனுக்கு பயன்தராது போனதன் காரணம் என்ன?

*இறைவனின் தண்டனை நேரத்தில் தான் நம்பியதால்*, அதற்கு முன்னர் அவன் மறுத்து குழப்பவாதியாக இருந்தது காரணமாகும் (10:91-92)

(4:18) *உயிர் பிரியும் நேரத்தில் மன்னிப்பு கேட்பதும், அந்த நேரத்தில் இஸ்லாத்தை ஏற்பதும் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படாது*

3) இறை நம்பிக்கை கொள்வது அல்லாஹ்வின் கரத்தில் என்பதை உரக்கச் சொல்லும் வசனம் எது?

(10:99) *உம் இறைவன் நாடியிருந்தால் பூமியில் இருக்கும் அனைவரும் ஒட்டுமொத்தமாக இறைநம்பிக்கை கொண்டிருப்பார்கள்.*

(10:100) *அல்லாஹ்வின் நாட்டமின்றி யாரும் இறைநம்பிக்கை கொள்ள முடியாது*”

________________________

Jazakallahu Haira جزاك اللهُ خيرًا

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *