அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 110* ||

*அத்தியாயம் 10 [யூனுஸ் (இறைத் தூதர்களில் ஒருவர் வசனம் 81- 90 வரை]*

1) நபி மூஸா அவர்கள் ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய பிரமுகர்களுக்கும் *எதிராக அல்லாஹுவிடம் என்ன பிராத்தனை* செய்தார்?

மூஸா நபி அவர்கள் செய்த பிரார்த்தனை:

(10:88) ஃபிர்அவ்னுக்கும், அவனது பிரமுகர்களுக்கும் வழங்கப்பட்ட செல்வங்களும் அலங்காரங்களும் அல்லாஹ்வின் பாதையிலிருந்து மக்களை வழிகெடுத்ததால், *அவர்களின் செல்வங்களை அழித்து, உள்ளங்களை கடினமாக்குமாறு பிரார்த்தித்தார். மேலும், துன்புறுத்தும் வேதனையை அவர்கள் காணும்வரை நம்ப மாட்டார்கள்* எனக் கூறினார்.

2) *நபி மூஸா* அவர்களை ஏற்றுக்கொண்டவர்கள் *அல்லாஹுவிடம்  என்ன பிராத்தனை* செய்தனர்?

மூஸா நபி அவர்களை

ஏற்றுக்கொண்டவர்களின்(இறை நம்பிக்கையாளர்கள்) பிரார்த்தனை:

(10: 85, 86) *எங்கள் இறைவனே, அநியாயக்காரர்களின் கொடுமைக்கு எங்களை ஆளாக்க வேண்டாம்! உன் அருளால் எங்களை காப்பாற்றுவாயாக!* என பிரார்த்தித்தனர்.

3) ஃபிர்அவ்ன் எந்நிலையில் “ஷஹாதா” மொழிந்தான்?

(10:90) *கடலில் மூழ்கும்போது*, இறுதியில் “இஸ்ராயீலின் மக்கள் நம்பிய இறைவனைத் தவிர வேறு கடவுள் இல்லை” என நம்பிக்கை தெரிவித்தான்.

___________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *