அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 109* ||

*அத்தியாயம் 10 [யூனுஸ் (இறைத் தூதர்களில் ஒருவர் வசனம் 71- 80 வரை]*

1 ) *நபி நூஹ் (அலை) அவர்களை  நிராகரித்தவர்கள்  எவ்வாறு அழிக்கப்பட்டனர்?*

(10:73) அல்லாஹ் நூஹ் (அலை) அவர்களையும் அவருடன் இருந்த நம்பிக்கையாளர்களையும் கப்பலில் காப்பாற்றினான் *நிராகரிப்பாளர்கள் பெரும் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டனர்*

2 ) *ஒவ்வொரு சமுதாயத்திற்கான தூதுவர்கள் அம்மக்கள் ஈமான் கொள்வதற்கு* எதனை கொண்டு வந்தார்கள்?

(10:74) *தெளிவான சான்றுகளை -بِٱلْبَيِّنَـٰتِ (பய்யினாத்*) கொண்டு வந்தார்கள் இறைவனிடமிருந்து வந்த *உண்மையான அத்தாட்சிகளை கொண்டு வந்தார்கள்*

3 ) நபி மூஸா (அலை) மற்றும் அவரது சகோதரர் நபி ஹாரூன் (அலை) அவர்கள் ஃபிர்அவனுக்கும் அவரது கூட்டத்தாருக்கும் சத்தியத்தை எடுத்துரைக்கும் போது, அவர்கள் அந்த சத்தியத்தை என்ன கூறி நிராகரித்தனர்?

(10:76,77,78) இது *பகிரங்கமான சூனியமே!* என்று கூறினர்

*தங்கள் முன்னோர்களின் வழியிலிருந்து திருப்ப வந்ததாக* குற்றம் சாட்டினர்

மூஸா (அலை) மற்றும் ஹாரூன் (அலை) *பூமியில் ஆதிக்கம் செலுத்த வந்ததாக* குற்றம் சாட்டினர் அவர்களை நம்ப மறுத்தனர்

_____________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *