அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 108* ||
அத்தியாயம் *10 [யூனுஸ் (இறைத் தூதர்களில் ஒருவர் வசனம் 61- 70* வரை]
1) *அல்லாஹ்வின் நேசர்களுக்கு* எந்த அச்சமும் இல்லை எதனால்?
(10:63) *அவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, இறையச்சமுடையோராகவும் இருப்பதனாலும்*
(10:64) *இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் நற்செய்தி உண்டு* என்ற இறைவாக்கு உள்ளதாலும்
2) *அல்லாஹ் நாம் செய்கிற அனைத்தையும் தொடர்ந்து கண்காணித்து கொண்டிருக்கிறான்* என்பதை விளக்கும் வசனம் எது?
(10:61) *நீங்கள் எந்தச் செயலைச் செய்தாலும், அதில் நீங்கள் ஈடுபடும் போது உங்களை நாம் கண்காணிக்காமல் இருப்பதில்லை*
3) *யார் வெற்றி பெற மாட்டார்கள்*?
(10:69) *அல்லாஹ்வின் மீது பொய்யை புனைந்து கூறுவோர்*
4) *அல்லாஹ்வின் நேசத்துடன் உள்ள நல்லடியார்களின் உள்ளம்* எந்த தன்மையைக் கொண்டிருக்கின்றது?
(10:63) *அல்லாஹ்வின் நேசத்துடன் உள்ள நல்லடியார்களின் உள்ளம் அவனைப் முழுமையாக விசுவாசித்து மற்றும் அவனைப் பயந்து வாழும் தன்மையைக் கொண்டதாக இருக்கும்*.
___________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*