அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 107* ||
*அத்தியாயம் 10 [யூனுஸ் (இறைத் தூதர்களில் ஒருவர் வசனம் 51- 60 வரை]*
*1) அநியாயக்காரர்கள் மறுமையில் வேதனை செய்யப்படும் போது அவர்களிடம் என்ன கூறப்படும்?*
உங்கள் தூதர் உங்களுக்கு எச்சரித்த வேதனையை இப்போதுதான் நம்புகின்றீர்களா இதை தானே நீங்கள் அவசரமாக தேடிக் கொண்டிருந்தீர்கள் என்று சொல்லப்படும் (10:51).
நிலையான இவ்வேதனையை சுவைத்துக் கொண்டிருங்கள் இதுவே நீங்கள் சம்பாதித்துக் தீமைகளுக்கான தண்டனை எனவும் கூறப்படும் (10:52)
2) *அநியாயம் செய்த பாவிகள் மறுமையில் தங்கள் வேதனையில் இருந்து விடுவிக்க*, அவர்களுக்கு சொந்தமாக இருக்கும் எதையாவது கொடுத்து, அதிலிருந்து தங்களை விடுவிக்க முயற்சித்தால், அது அவர்களுக்கு பயன் தருமா?
(10:54) *பயன் தராது*
3) *அல்லாஹுவின் வார்த்தை நல்லடியார்களுக்கு* எவ்வாறு திகழ்கிறது?
(10:57,58) அல்லாஹ்வின் வார்த்தை (குர்ஆன்) *நல்லடியார்களுக்கு இதயங்களின் நோய்களை குணப்படுத்தி, அவர்களை நல்வழியில் வழிநடத்தும் அருட்கொடையாக* உள்ளது.
இது *ஏற்றுக்கொள்ளும் மனங்களுக்கு வழிகாட்டியாக, அவர்களது வாழ்வை இறைஉணர்வோடு இணைத்து*, நேர்மையாக வழிநடத்துகிறது.
குர்ஆன் அல்லாஹ்வின் அருளும், அவன் கருணையினாலும் வந்துள்ளது. எனவே, இதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்,
மேலும் அவர்கள் *சேகரிக்கும் செல்வத்தைவிட குர்ஆன் மிக்க மேலானது*.
4) *உணவில் ஹராம் மற்றும் ஹலால் என்பதைச் தீர்மானிக்கும் அதிகாரம்* மனிதர்களுக்கோ அல்லது தூதர்களுக்கோ உள்ளதா?
(10:59) *இல்லை*.
_________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*