அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 106* ||
*அத்தியாயம் 10 [யூனுஸ் (இறைத் தூதர்களில் ஒருவர் வசனம் 41- 50 வரை]*
1) *அல்லாஹுவின் தூது செய்தி முன்பு வாழ்ந்த அனைத்து சமுதாயங்களுக்கும் சென்றடைந்துள்ளது* என்பதை எந்த வசனத்தில் இருந்து நாம் அறியலாம்?
(10:47) *ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு தூதர் உண்டு. அவர்களின் தூதர் வரும்போது அவர்களுக்கிடையே நீதியான முறையில் தீர்ப்பளிக்கப்படும். அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்*.
2) நபிகள் அவர்களை *பொய்யர் என கூறிய இறை மறுப்பாளர்களை நோக்கி அல்லாஹ்* என்ன கூறுமாறு நபி அவர்களை கட்டளையிடுகிறான்?
*என் செயல் எனக்குரியது! உங்களுடைய செயல் உங்களுக்குரியது. நான் செய்வதை விட்டும் நீங்கள் விலகியவர்கள். நீங்கள் செய்வதை விட்டும் நான் விலகியவன்* என்று கூறுவீராக!
3) *ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு தவணை இருப்பது என்பது எதை குறிக்கின்றது*, மற்றும் அந்த தவணை நிறைவடைந்த பிறகு என்ன நிகழும்?
ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு தவணை இருப்பது என்பது, அந்த சமுதாயத்திற்கு *அல்லாஹ் கொடுத்துள்ள ஒரு குறிப்பிட்ட காலத்தை அல்லது அவகாசத்தை குறிக்கும்*
இந்த காலம் அவர்களின் தீய செயல்களைச் சரிசெய்து திருத்திக்கொள்ள அல்லது *நேர் வழியில் பயணிப்பதற்கு ஒரு வாய்ப்பாகும்.*
*சற்று நேரம்கூடப் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்*
*அந்த தவணை நிறைவடைந்த பிறகு, அவர்கள் செய்த செயல்களின் அடிப்படையில் அல்லாஹ்வின் தீர்ப்பு வழங்கப்படும், இது நன்மை அல்லது தண்டனையாக குறிக்கும்.*
4) இந்த வசனத்தில் (10:50) *குற்றவாளிகளுக்கு அல்லாஹ்வின் வேதனையை தடுக்க முடியுமா* என்று கேட்கும் போது, என்ன கருத்து நமக்கு விளங்குகிறது ?
*அல்லாஹ்வின் தண்டனை வரும்போது அதனை யாராலும் தடுக்க முடியாது*
*மனிதர்கள் எவ்வளவு சக்தி படைத்தவர்களாக இருந்தாலும், அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது*
_________ _________ _________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*