அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 105* ||
அத்தியாயம் *10 [யூனுஸ் (இறைத் தூதர்களில் ஒருவர் வசனம் 31- 40* வரை]
*அத்தியாயம் 10 [யூனுஸ் (இறைத் தூதர்களில் ஒருவர் வசனம் 31- 40 வரை]*
1) *அல்லாஹ்வின் தனித்துவமான ஆற்றல்களை* சொல்லும் வசனம் எது?
(10:31,32) மனிதர்களுக்கு *வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பதும்*,
*செவிப்புலனையும், பார்வைகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும்*,
*உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துப்பதும்,*
*காரியங்களை நிர்வகிப்பதும்,*
*படைப்பைத் தொடங்கி, (அது அழிந்த) பின்னர் அதை மறுபடியும் படைப்பதும்*
*சத்தியத்திற்கு வழிகாட்டுவதும்*
இவை அனைத்தும் *அல்லாஹ்வின் தனித்துவமான ஆற்றல்*
2) வசனம் *10:35 அடிப்படையில் இணை கடவுள்களுக்கு எந்த அறிவு இல்லை* என அல்லாஹ் கூறுகிறான்?
*இணை கடவுள்களுக்கு அல்லாஹ் வழிகாட்டப்பட்டாலே தவிர அவர்களுக்கு தானாகவே வழியை அறியாதவர்கள் உள்ளனர் ஆகவே அவர்கள் பின்பற்றத் தகுதியற்றவர்கள்*
3) *குர்ஆன் தனது வார்த்தையாக இருப்பதை உண்மையாகப் பறைசாற்றுவதற்காக* இறைமறுப்பாளர்களை நோக்கி அல்லாஹ் விடுகிற அறை கூவுல் என்ன?
(10:38) இறைமறுப்பாளர்களை நோக்கி அல்லாஹ்… *இதுபோன்ற(குர்அனை) ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! என்னையன்றி உங்களால் முடிந்த எவரையும் அழைத்துக் கொள்ளுங்கள்!* என்று அறை கூவுல் விடுக்கப்பட்டுள்ளது
4) இதே போன்ற *அறை கூவலை இதற்கு முன் உள்ள (1 – 9) அத்தியாயத்தில் அல்லாஹ்* விடுகிறான். அது எந்த அத்தியாயத்தில் உள்ள வசனம்?
(2:23) நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) *நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்!*
_________ _________ _________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*