அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 104* ||
*அத்தியாயம் 10 [யூனுஸ் (இறைத் தூதர்களில் ஒருவர் வசனம் 23- 30 வரை]*
1) *இணை கடவுள்களாக கருதப்பட்டவர்கள் மறுமையில்* தங்களை வணங்கிய இணைவைப்பாளர்களை நோக்கி என்ன கூறுவார்கள்?
(10:29,30) *நீங்கள் எங்களை வணங்கவே இல்லை. உங்களுக்கும் எங்களுக்குமிடையே சாட்சியாக இருக்க அல்லாஹ்வே போதுமானவன். உங்கள் வணக்கத்தை நாங்கள் அறியாதவர்களாக இருந்தோம்* என்று அவர்களின் இணைக் கடவுள்கள் இணைவைத்தோரிடம் கூறுவர்.
2) *நன்மை* மற்றும் *தீமை* செய்தோரின் *கூலி* எவ்வாறு இருக்கும்?
(10:26,27) நன்மை செய்தவர்களுக்குக் கூலி *நன்மைதான்*. அவர்கள் *செய்ததை விட அதிகமாகவும்* கிடைக்கும்.
தீமைகளை செய்தவர்களுக்குக் கூலி *அதைப் போன்ற தீமையே*.
3) *மலக்குகளின் பணியாக* இவ்வசனங்களில் குறிப்பிடுவது எது?
(10:21) மனிதர்கள் செய்யும் *சூழ்ச்சியை நமது தூதர்க(ளான வானவர்க)ள் பதிவு செய்கின்றனர்.*
*4) மனிதர்களை அல்லாஹ் எதனை நோக்கி அழைக்கின்றான்?*
(10:25) *அமைதி இல்லத்தை(دَارِ ٱلسَّلَـٰمِ) நோக்கி* அல்லாஹ் அழைக்கிறான்.
______________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*