அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 103* ||

*அத்தியாயம் 10 [யூனுஸ் (இறைத் தூதர்களில் ஒருவர் வசனம் 11- 21 வரை]*

1) நபி (ஸல்)  அவர்கள், நமது பிரார்த்தனையில் எவற்றைச் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்கள்?

*நம் குடும்பத்திற்கு எதிராக கேட்டுப் பிரார்ப்பதை*

*நமக்கெதிராகவும் நமது குழந்தைகளுக் கெதிராகவும் நமது செல்வங்களுக் கெதிராகவும் பிரார்த்திக்க வேண்டாம்* என தடுத்தார்கள்

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்கள்: முஸ்லிம் (5736), அபூதாவுத் (1309)

2) மனிதனுக்கு ஒரு துன்பம் ஏற்படும் போதும், அதை அல்லாஹ் நீக்கி விடும்போதும் அவன் எவ்வாறு நடந்து கொள்கிறான் என்று அல்லாஹ் கூறுகிறான்?

(10:12) மனிதனின் ஏதேனும் துன்பம் நேர்ந்தால், *நின்றும், உட்கார்ந்தும், படுத்தும் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதும்*. ஆனால், அல்லாஹ் அவனுடைய துன்பத்தை அவனை விட்டு நீக்கிவிட்டால், *மனிதன் தனக்கு ஏற்பட்டிருந்த துன்பத்திற்காக எப்போதுமே அல்லாஹ்விடம் பிரார்த்திக்காதவன் போல்* நடந்து கொள்கிறான்

(10:21) *மனிதர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்குப்பின் ஒரு அருளைக்கொண்டு இன்பமடையும்படி அல்லாஹ் செய்தால்*, அச்சமயம் அவர்கள் *அல்லாஹ்வின் வசனங்களில் (தவறான பொருள் கற்பிக்கச்) சூழ்ச்சி செய்வது அவர்களுக்கு (வழக்கமாக) உள்ளதாக குறிப்பிடுகிறான்*

3) *பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாரிடையே நடைபெற்ற முதல் குழப்பம்* எவரால் ஏற்பட்டது?

*பெண்களால்தான் ஏற்பட்டது*.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி),

நூல்கள்: முஸ்லிம் (5292), இப்னுமாஜா (3990), அஹ்மத் (10743)

4) *எதனை பின்பற்றுவதில்லை என நபி(ஸல்) அவர்கள் இறைமறுப்பாளர்களிடம்* கூற அல்லாஹ் கட்டளை இடுகிறான்?

*இறைச்செய்தியாக அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான்(நபிகளார்) பின்பற்றுவதில்லை*. என் இறைவனுக்கு நான் மாறு செய்தால் மகத்தான நாளின் வேதனைக்கு அஞ்சுகிறேன் என்று (நபியே!) கூறுவீராக!

5) *கப்ர் வணக்கத்தை கண்டிக்கும்* வசனம் எது ?

(11:18) அல்லாஹ்வை விட்டுவிட்டு, *தமக்குத் தீமையோ, நன்மையோ செய்யாதவற்றை அவர்கள் வணங்குகின்றனர். ‘இவர்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரைப்பவர்கள்*’ என்றும் கூறுகின்றனர். “*வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ்வுக்குத் தெரியாதவற்றை அவனுக்கு நீங்கள் அறிவிக்கிறீர்களா*? அவன் தூயவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் *அவன் உயர்ந்தவன்*” என்று கூறுவீராக!

_________ _________ _________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *