அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 100* ||
அத்தியாயம் 9 [*அத்தவ்பா (பாவ மன்னிப்பு*) வசனம் 111- 120 வரை]
1) *இணைவைப்பில் இருக்கும் குடும்பத்தினருக்காக நாம் பாவமன்னிப்பு* கூறலாமா? ஆதாரம் தரவும்.
(9:113) *பாவமன்னிப்பு கோர அனுமதி இல்லை*.
அறிவிப்பவர்: முஸய்யப் (ரலி), நூல்கள்: புகாரி (4675), முஸ்லிம் (39)
2) *தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட* அந்த மூவர் யார்?
*கஅப் பின் மாலிக்*
*முராரா பின் ரபீஉ அல் அம்ரீ*
*ஹிலால் பின் உமய்யா அல் வாக்கிஃபீ*
நூல்கள்: புகாரி (4418), முஸ்லிம் (5346)
3) இறைவன் சொல்லக்கூடிய *இறை விசுவாசிகளுடன் உள்ள மகிழ்ச்சிகரமான வியாபாரம்* என்றால் என்ன?
(9:111) இறைவன் சொல்லக்கூடிய இறை விசுவாசிகளுடனான மகிழ்ச்சிகரமான வியாபாரம் என்பது, *இறை வழியில் தங்கள் உயிரையும் செல்வத்தையும் தியாகம் செய்யும் விசுவாசிகளுக்கு, அல்லாஹ் சுவனத்தை வழங்குவதை குறிக்கிறது*.
____________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*