*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 10* ||
[ஆலு இம்ரான் அத்தியாயம் *3* (வசனங்கள் *111-120* வரை)]
A) أُو۟لَـٰٓئِكَ مِنَ ٱلصَّـٰلِحِينَ (*உலாயிக்க மினஸ் ஸாலிஹீன்*) இவர்கள் எத்தகையோர்?
B) *இறைமறுப்பாளர்கள் இவ்வுலகில் செய்யும் செலவுகள் எதற்கு ஒப்பானது*?
C) *தீயவர்களின் தீங்கிலிருந்தும், கெட்டவர்களின் சூழ்ச்சியிலிருந்தும் தப்பிக்க* அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களுக்கு கூறும் உபதேசம் என்ன?
______________________
A) *அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி, நன்மையை ஏவி, தீமையை தடுத்து நற்காரியங்களை விரைந்து செய்பவர்களே* உலாயிக்க மினஸ் ஸாலிஹீன்கள்
அவர்கள் *அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகின்றனர். நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கின்றனர். நற்காரியங்களில் விரைந்து செல்கின்றனர்*. அவர்கள் *நல்லவர்கள்* ஆவர். (3:114)
————————–
B) *இறைமறுப்பாளர்கள் செய்யும் செலவினங்கள் கடும் குளிர் காற்றினால் அழிக்கப்பட்ட பயிர்களுக்கு ஒப்பானது*
*இவ்வுலக வாழ்வில் அவர்கள் செலவு செய்வதன் உதாரணம், கடும் குளிரான காற்றைப் போன்றது. தமக்குத் தாமே அநியாயம் செய்துகொண்ட கூட்டத்தாரின் பயிர்களை அது தாக்கி அழித்துவிட்டது*. (3:117)
————————–
C) *பொறுமையை மேற்கொண்டு, இறையச்சத்துடன் இருத்தல்*
நீங்கள் *பொறுமையை மேற்கொண்டு, இறையச்சத்துடன் இருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்குச் சிறிதும் பாதிப்பை ஏற்படுத்தாது*. (3:120)
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*