*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 09* ||
[ஆலு இம்ரான் (அத்தியாயம் *3* வசனங்கள் *100-110* வரை)]
A) *ஒரு சமுதாயம் வெற்றி பெற்ற சமுதாயமாக* ஆவதற்குரிய வழிமுறை என்ன?
B) وَأَمَّا ٱلَّذِينَ ٱبْيَضَّتْ وُجُوهُهُمْ *அந்நாளில் இவர்களுக்கு கிடைக்கும் பாக்கியம் என்ன?*
C) பின் வசனத்திற்கு விளக்கமளிக்கவும்…
அனைவரும் *அல்லாஹ்வின் கயிற்றைப் பலமாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்!* (3:103)
_________________________
A) *நன்மைகளை ஏவி தீமைகளை தடுக்கின்ற சமுதாயமாக இருத்தல் வேண்டும்.*
*நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்* (3:104)
நீங்கள், *மனிதர்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள். நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கிறீர்கள்*. (3:110)
_________________________
B) அவர்கள் *சொர்க்கத்தை பரிசாக பெற்று அல்லாஹ்வின் அருளில் நிலைத்திருப்பார்கள்.*
*வெண்மையான முகமுடையோர் அல்லாஹ்வின் அருளில் இருப்பார்கள்*. அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (3:107)
_________________________
C) *திருக்குர்ஆனும், அதன் விளக்கவுரையான நபிவழியும்*
………*நீங்கள் அனைவரும் (குர்ஆனாகிய) அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடிப்பதையும், பிரிந்துவிடாமலிருப்பதையும் விரும்புகின்றான்*. (முஸ்லிம் 3533)
கவனத்தில் கொள்ளுங்கள்! *நான் உங்களிடையே கனமான இரண்டு (அல்லாஹ்வின் வேதமான குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபி மொழிகள்) பொருட்களை விட்டுச் செல்கிறேன்*. அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் வேதமாகும். அதுவே அல்லாஹ்வின் கயிறாகும். அதைப் பின்பற்றுபவர் நல்வழியில் இருப்பார். அதைக் கைவிடுபவர் தவறான வழியில் இருப்பார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 4782)
_________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*