*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

*கேள்வி 01*

[ஆலு இம்ரான்
(அத்தியாயம் *3* வசனங்கள் *21-30* வரை)]

a) *இந்த வசனத்தின் அடிப்படையில், இறைவனின் சக்தி மற்றும் அருளின் எல்லையற்ற தன்மையை நாம் புரிந்து கொள்ளலாம்?* அது எந்த வசனம்

A)*நீயே பகலில் இரவை நுழைக்கிறாய்; இரவில் பகலை நுழைக்கிறாய்! உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறாய்; உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறாய்! நீ நாடியோருக்குக் கணக்கின்றிக் கொடுக்கின்றாய்*
3:27

மற்றும்

*உங்கள் உள்ளங்களில் இருப்பதை நீங்கள் மறைத்தாலும் அல்லது வெளிப்படுத்தினாலும் அதை அல்லாஹ் அறிகிறான். வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றையும் அவன் அறிகிறான். ஒவ்வொரு பொருளின்மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்*” என்று கூறுவீராக! 3:29

விளக்கம்:

“பகலில் இரவை நுழைக்கிறாய்; இரவில் பகலை நுழைக்கிறாய்” (*இரவும் பகலும் மாறுவது*)

“உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறாய்; உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறாய்” (*விதையிலிருந்து செடி முளைப்பது, உயிரினங்கள் இறப்பது*)

“நீ நாடியோருக்குக் கணக்கின்றிக் கொடுக்கின்றாய்” (*அல்லாஹ்வின் அளவற்ற அருள் மற்றும் கொடைகள்*)

“வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றையும் அவன் அறிகிறான்” (*பிரபஞ்சத்தின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது*)

உங்கள் உள்ளங்களில் இருப்பதை நீங்கள் மறைத்தாலும் அல்லது வெளிப்படுத்தினாலும் அதை அல்லாஹ் அறிகிறான். (*மனிதர்களின் மறைமுகமான எண்ணங்கள், உள்நோக்கங்கள், மற்றும் செயல்களை கூட அல்லாஹ் அறிவான்*)

“ஒவ்வொரு பொருளின்மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்” (*அல்லாஹ்வின் ஆற்றல் எல்லையற்றது என்பதைக் காட்டுகிறது. எல்லாவற்றையும் படைத்தவன், கட்டுப்படுத்துகிறவன், அனைத்தையும் தீர்மானிக்கிறவன். இது அவனுடைய ஆற்றலின் முழுமையையும், அனைத்து விஷயங்களின் மீதான அவனது கட்டுப்பாட்டையும் எடுத்துக்காட்டுகிறது.*)
—————————-
b). *தீர்ப்பு நாளின் போது ஒரு அடியான் தனக்கு எது தூரமாக இருக்க வேண்டும்* என ஆசைப்படுகிறான்?

*தனக்கும் தாம் செய்த தீமைக்கும்* 3:30
—————————–
C) *எவருடைய செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் அழிந்துவிட்டதாக அல்லாஹ் கூறுகிறான்*?

*அல்லாஹ்வின் வசனங்களை மறுத்து, நபிமார்களை அநியாயமாகக் கொலை செய்து, மக்களில் நீதியை ஏவுவோரையும் கொலை செய்வோர்களுடைய செயல்கள்* 3:21
—————————-
d) *ஆட்சி அதிகாரம் அல்லாஹ்வின் அருள்களில் ஒன்று* என்பதை தெளிவு படுத்தும் வசனம் எது?

அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியவரிடம் ஆட்சியைக் கொடுக்கிறாய். நீ நாடியவரிடமிருந்து ஆட்சியைப் பறிக்கிறாய். நீ நாடியவரைக் கண்ணிப்படுத்துகிறாய். நீ நாடியவரை இழிவுபடுத்துகிறாய். 3:26

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *