*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 47* ||

[அத்தியாயம் 5 (*அல்மாயிதா* – உணவு தட்டு) வசனம் *101-110* வரை]

1) *ஈஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைபடி* செய்தவைகள் என்னென்ன?

*தொட்டிலிலும், இளமைப் பருவத்திலும் மக்களிடம் பேசியது!*

*களிமண்ணால் பறவை வடிவமைத்து அதில் ஊதியதில், அது பறவையாக மாறியவை*

*பிறவிக் குருடரையும், தொழுநோயாளியையும் குணப்படுத்தியது*

*இறந்தவர்களை உயிர்பித்தல்,  இவை அனைத்தும் அல்லாஹ்வின் விருப்பப்படி நடந்தவை* [5:110]

2) *மார்க்க விசயத்தில் முன்னோர்களை பின்பற்ற கூடாது* எனக்கூறும் வசனம் எது?

*அல்லாஹ் அருளியதன் பக்கமும் தூதரின் பக்கமும் வாருங்கள்*! என்று அவர்களிடம் கூறப்பட்டால் *எங்கள் முன்னோரை நாங்கள் எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதுமானது* என்று கூறுகின்றனர். அவர்களின் *முன்னோர் எதையும் தெரியாதவர்களாகவும், நேர்வழியில் நடக்காதவர்களாகவும் இருந்தாலுமா?* (5:104)

3) *தீமைகளை தடுக்காமல் இருந்தால் என்ன நடக்கும்?*

நபி (ஸல்) அவர்கள் *மனிதர்கள், அவர்களுக்கிடையில் தீமைகளைக் காணும்போது அதைத் தடுக்காமல்* இருந்து விடுகிறார்கள்.

இதனால் *தனது தண்டனையின் மூலம் அவர்களை அல்லாஹ் சூழ்ந்து கொள்வான்* என்று குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: கைஸ் பின் ஹாஸிம், நூல்கள்: அஹ்மத் (50), திர்மிதீ (2094)

_____________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *