*குர்பானி கொடுப்பவர்கள் கடைபிடிக்க வேண்டியவை யாவை*

குர்பானி கொடுக்க நாடியவர் துல்ஹஜ்ஜு மாதம் பிறை ஒன்று முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம், முடி இவற்றில் எதையும் வெட்டக் கூடாது.

*நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்* என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)

நூற்கள் : முஸ்லிம் (3655), நஸயீ (4285)

ஆனால் ஒருவருக்கு முதல் 10 நாட்களுக்கு இடையில் கொடுப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. அவர் எப்போது குர்பானிக் கொடுப்பதாக எண்ணிக் கொண்டாரா அப்போதிருந்து கொடுக்கும் வரை இவற்றை வெட்டக்கூடாது. ஏனென்றால் குர்பானி கொடுப்பதாக அவர் முடிவெடுக்கும் போது தான் இந்தத் தடை ஏற்படும்.

தன்னுடைய முயற்சியின்றி தானாக நகம் முடி ஆகியவை விழுந்தால் இதில் தவறேதுமில்லை. சில நேரங்களில் இவைகள் இருப்பதினால் மிகவும் துன்பம் ஏற்படலாம். உதாரணமாக கையின் நகம் உடைந்து தொங்கிக் கொண்டு வலியை அதிகப்படுத்திக்கொண்டிருக்கிறது.

அல்லது அறுவை சிகிச்சை செய்வதற்காகவோ அல்லது காயத்தை குணப்படுத்துவதற்காகவோ முடியை வெட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது போன்ற சிரமமான நிலையில் வெட்டுவதில் தவறேதும் இல்லை. ஏனென்றால் அல்லாஹ் எந்த உயிரையும் அதன் சக்திக்கு அப்பாற்பட்டு கஷ்டம் கொடுப்பதில்லை. நபி (ஸல்) அவர்களுடைய வழிமுறையை நம்மால் முடிந்த அளவு பின்பற்றுவதே நம்மீது கடமை.

குடும்பத்தை நடத்திச் செல்பவர் தன் குடும்பத்தின் சார்பாக குர்பானி கொடுப்பார். இவர் மட்டும் நகம் முடிகளைக் களையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் இவ்வாறு கடைப்பிடிக்க வேண்டியதில்லை. அனைவரும் கட்டாயம் இதைக் கடைபிடிப்பதாக இருந்தால் நபித்தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கட்டளையிட்டிருப்பார்கள்.

———————

*ஏகத்துவம்*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *