குர்ஆன் ஓதும் பிள்ளைகளின் பெற்றோருக்கு கியாம நாளில் கிரீடம் அணிவிக்கப்படுமா❓
இந்தக்கருத்தில் சில ஹதீஸ்கள் இடம் பெருகிறது.
யார் குர்ஆனை ஓதி அதில் உள்ளதின் படி செயல்படுகிறாரோ அல்லாஹ் அவருடைய பெற்றோருக்கு கியாமநாளில் கிரிடம் அணிவிப்பான் அதன் ஒளி சூரியனின் ஒளியை விட மிக அழகான ஒளியாக இருக்கும்.
எனவே இந்தக் குர்ஆனைக் கொண்டு செயல்படுபவரைப்பற்றி உங்கள் எண்ணம் என்ன என நபியவர்கள் கேட்டார்கள்.
இந்த செய்தி அபூதாவூதில் 1241, அபூயஃலா 1493, ஹாகிம் பாகம் 1 பக்கம் 756 யிலும் பைஹகி பாகம் 2 யிலும் இடம் பெருகிறது என்றாலும் இந்த செய்தியின் அனைத்து அறிவிப்பாளர் தொடரிலும் ஸப்பான் பின் ஃபாயித் அல்ஹம்ராவி என்பவர் இடம் பெருகிறார். இவர் பலவீனமானவர்.
இவரை அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர். இவரின் செய்திகள் மறுக்கப்படவேண்டியது என்றும் அஹ்மத் பின் ஹன்பல் அவர்களும் இப்னு ஹிப்பான அவர்கள் இவர் மறுக்படவேண்டியவர் என்றும் இவர் ஸஹ்ல் பின் முஆத் அவர்கள் வழியாக இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவிப்பவர் என்றும் இமாம் இப்னுஹஜர் அவர்கள் தக்ரீபில் பலவீனமானவர் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
இதே செய்தி முஆத் பின் ஜபல் (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள். அந்த செய்தி மதாபுல் ஆயா 3583 யிலும் இமாம் பைஹகி அவர்கள் சுஃபுல் ஈமான் யிலும் பதிவு செய்துள்ளார்கள்.
இந்த செய்தியும் பலவீனமானதே காரணம் இந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் சுவைத் பின் அப்தில் அஜீஸ் என்பவர் இடம் பெருகிறார் இஹ்ரை ஹதீஸ் துரையில் விடப்பவர் என்று இமாம் அஹ்மத் அவர்களும் யஹ்யா பின் மயீன் ரஹ் அவர்கள் இவர் உறுதியற்றவர் என்றும் இவருடைய செய்தியில் சிலதில் விமர்சனம் உள்ளது என்று இமாம் புகாரி ரஹ் அவர்களும் கூறியுள்ளனர். எனவே இந்த செய்தியும் பலவீனமானதுதான்.
குர்ஆன் ஓதுவது தொடர்பாக பல ஆதாரப்பூர்வமான செய்திகள் இடம் பெருகிறது. அந்த செய்திகளை கூறுவோமாக. அல்லாஹ் நாம் அனைவருக்கும் நேர்வழிகாட்ட போதுமானவன்.