குனூத் நாஸிலா (قنوت نازله)
——————————————
குனூத் நாஸிலா எனும் சோதனைக் கால பிரார்த்தனை…
பாலஸ்தீனில் வாழும் முஸ்லிம்களை ரமலான் மாதம் என்று கூட பாராமல் யூத அயோக்யர்கள் கொன்று அழித்து வருகின்றனர்.
ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் மிகப் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்லாமிய சமுதாயம் மிகப் பெரும் சோதனைகளுக்கு உள்ளாகும் போது அவர்களின் இன்னல்கள் நீங்குவதற்காக முயற்சி செய்வதும், அவர்களின் துன்பங்கள் அகல இறைவனிடம் பிரார்த்திப்பதும் முஸ்லிம்கள் மீது கடமையாகும்.
குனூத் நாஸிலாவின் நோக்கம்
———————————————-
குனூத்துன் நாஸிலா என்பது சோதனையான காலகட்டங்களில் முஸ்லிம்களுக்கு இறையுதவியை வேண்டியும், எதிரிகளுக்கு எதிராக இறைவனின் சாபத்தை வேண்டியும் நபி (ஸல்) அவர்கள் ஓதிய குனூத் ஆகும்.
இதனை …
நபி (ஸல்) அவர்கள் சோதனைகள் ஏற்படும் காலகட்டங்களில் ஓதியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை மனனம் செய்த சுமார் எழுபது நபர்களை இணை வைப்பவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள்
அந்த முஷ்ரிகீன்கள் எழுபது நபர்களையும் கொன்று விட்டனர்) அப்போது நபி (ஸல்) அவர்கள் முஷ்ரிகீன்களுக்கு எதிராக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள் என்று அனஸ் (ரலி) விடையளித்தார்கள்.
புகாரி 1002
கடமையான தொழுகை அனைத்திலும் சோதனைக்கால குனூத் ஓதலாம்
சோதனையான கால கட்டங்களில் ஓதக்கூடிய இந்தக் குனூத்தை நபியவர்கள் சுப்ஹுத் தொழுகையில் மட்டுமல்லாது அனைத்து கடமையான தொழுகைகளிலும் ஓதியுள்ளார்கள்.
கடமையான தொழுகைகளில் கடைசி இரக்அத்தில் ருகூவிற்குப் பிறகு ஒதியுள்ளார்கள்.
லுஹ்ர் , இஷா, சுஹுஆகிய தொழுகைகளின் கடைசி ரக்அத்களில் (ருகூஉவிலிருந்து எழுந்து) சமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறிய பிறகு குனூத் (சிறப்புப் பிரார்த்தனை) ஓதுவார்கள்.
அதில் இறை நம்பிக்கையாளர்களுக்காகப் பிரார்த்திப்பார்கள். (கொடுஞ்செயல் புரிந்த குறைஷி) இறைமறுப்பாளர்களைச் சபிப்பார்கள்.
புகாரி (797)
சுருக்கமாக ஓத வேண்டும்
—————————————
யா அல்லாஹ் ! பாலஸ்தீனில் பாதிக்கப்படும் முஸ்லிமான பலவீனமான ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாப்பாயாக!
அவர்களுக்கு உன் உதவியை இறக்கி அவர்களைப் பலப்படுத்துவாயாக!
இறைவா பாலஸ்தீனிய மக்களுக்கு அநியாயம் செய்யும் யூத அரக்கர்கள் மீது உன் பிடியை இறுக்குவாயாக!
————————-
ஏகத்துவம்