கிப்லா திசை நோக்கி கழிவறையை அமைக்கலாமா❓
கட்டிடதத்திற்குள் கழிவறை எவ்வாறு அமைந்தாலும் குற்றமில்லை.
மலம் ஜலம் கழிக்கும் போது வெட்ட வெளியில் கிப்லாவை முன்னோக்கக்கூடாது. பின்னோக்கக்கூடாது.
அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்களிடம், மல ஜலம் கழிக்கும் முறை உட்பட அனைத்தையுமே உங்கள் இறைத்தூதர் உங்களுக்குக் கற்றுத்தந்திருக்கிறார் (போலும்) என்று கேட்கப்பட்டது.
அதற்கு சல்மான் (ரலி) அவர்கள், ஆம் (உண்மைதான்); மல ஜலம் கழிக்கும்போது கிப்லாவை முன்னோக்க வேண்டாமென்றும்
வலக் கரத்தால் துப்புரவு செய்ய வேண்டாமென்றும்,
மூன்றை விடக் குறைவான கற்களால் துப்புரவு செய்ய வேண்டாம் என்றும்,
கெட்டிச் சாணத்தாலோ,
எலும்பாலோ துப்புரவு செய்ய வேண்டாமென்றும் எங்களைத் தடுத்தார்கள் என்று கூறினார்கள்
ஏகத்துவம்