கல்லெறியும் நாட்களில் வேறு அமல்கள் செய்யலாமா?
கல் எறிவது அல்லாமல் இந்த நாட்களில் வேறு அமல்கள் எதுவுமுள்ளதா? நாம் விரும்பி செய்யக்கூடிய உபரியான அமல்கள் மட்டும்தானா? வாய்ப்பு கிடைத்தால் தவாஃப் செய்ய மக்காவுக்கு வரலாமா?
அதிகமதிகம் தவாஃப் செய்து கொள்ளலாம். தொழுகை, திக்ர் என விரும்பிய அமல்களைச் செய்து கொள்ளலாம்.
“அப்து முனாஃபின் சந்ததிகளே! இந்த ஆலயத்தில் இரவு பகல் எந்நேரமும் தவாஃப் செய்பவரையும், தொழுபவரையும் நீங்கள் தடுக்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்கள்: திர்மிதீ 795, அபூதாவூத் 1618, நஸயீ 2875)