கரிந்து போன முகத்துடைய பெண்
அவ்ஃப் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள
“நானும் கரிந்து போன முகத்துடைய பெண்ணும் மறுமை நாளில் இந்த இரு விரல்களைப் போன்று இருப்போம்”.
யஸீத் இப்னு ஸரீஉ (ரலி) அவர்கள் இந்த நபிமொழியைக் கூறிய போது தம் நடுவிரலையும், சுட்டு விரலையும் இணைத்து சுட்டிக்காட்டினார்கள்.
கரிந்து போன முகத்துடைய பெண் – அதாவது, தன் கணவனை இழந்து விட்ட, குடும்பப் பாரம்பர்யமும் நல்ல அழகும் இருந்து, இறந்து விட்ட கணவனின் குழந்தைகளுக்காக அவர்கள் தன்னை விட்டுப் பிரியும் வரை அல்லது இறந்து விடும் வரை திருமணம் செய்து கொள்ளாமலிருக்கும் பெண்.
(நூல்: அபூதாவூத் 5149- அஹ்மத்)
இது பலவீனயான ஹதீஸாகும் இந்த ஹதீஸ் அபூதாவூத் 5149, முஸ்னத் அஹ்மத் :24006 வருகின்றது
இதில் நஹ்ஹாஸ் பின் கஹ்ம் என்பவர் இடம் பெறுகின்றார்கள்.
இமாம் யஹ்யா அல்கத்தான்,இமாம் இப்னு மயீன்,அபூ ஹாதம்,நஸயீ,அபூதாவூத்,இப்னு அதி, தாரகுத்னி போன்றார்கள் விமர்சனம் செய்துள்ளார்கள் இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் கூறுகிறார்கள் உறுதியானவர்களின் ஹதீஸ்க்கு மாற்றமாக அறிவிப்பவர் அதனால் இவரின் ஹதீஸ்களை ஆதாரமாக எடுக்ககூடாது என்று கூறுகிறார்கள்.
இன்னும் பலர் விமர்சனம் செய்துள்ளார்கள்
பார்க்க: தஹ்தீபுத் தஹ்தீப்: 10/426
அவ்ஃப் இப்னு மாலிக் ரலி கூறியதாக ஷத்தாத் அபூ அம்மார் என்பவர் அறிவிக்கின்றார் ஆனால் ஷத்தாத் என்பவர் அவ்ஃப் பின் மாலிக் ரலி அவர்களிடம் எதையும் கேற்க்கவில்லை என்று இமாம் ஸாலிஹ் ஜஸ்ரா கூறுகிறார்கள்.
நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்: 4/317