கத்னா செய்யும் வயது எது?
நபி (ஸல்) அவர்கள் தம் பேரர்களான ஹஸன் ரலி ஹுஸைன் ரலி ஆகியோருக்கு ஏழாம் நாளில் கத்னா செய்தனர் என்று ஆயிஷா ரலி அறிவிக்கும் ஹதீஸ் ஹாகிம் பைஹகீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
ஏழாம் நாளில் தான் செய்ய வேண்டும் என்று கட்டாயம் இல்லை. பருவமடைந்தவுடன் (சுமார் பதினைந்து வயதில்) கத்னா செய்யலாம். நபி ஸல் காலத்தில் பருவ வயது அடைந்தவுடன் கத்னா செய்யும் வழக்கமிருந்தது. அதை நபி (ஸல்) ஆட்சேபிக்காமல் அங்கீகாரம் வழங்கியுள்ளனர்.
நபி ஸல் காலமான போது நான் கத்னா செய்யப்பட்டவனாக இருந்தேன். ஆண்கள் பருவ வயது அடையும் வரை மக்கள் கத்னா செய்ய மாட்டார்கள் என்று இப்னு அப்பாஸ் ரலி அறிவிக்கும் ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றுள்ளது.
6299 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் (உயிர்) கைப்பற்றப் பட்ட போது தாங்கள் எவ்வாறிருந்தீர்கள்? என்று வினவப்பட்டது. அதற்கு அவர்கள், நான் அப்போது விருத்தசேதனம் செய்தவனாயிருந்தேன் என்று பதிலளித்தார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகின்றார்:
பருவ வயதை நெருங்கிய பிறகே (அன்றைய) மக்கள் விருத்தசேதனம் செய்வது வழக்கம்.
எனவே இத்தனை நாட்களுக்குள் கத்னா செய்ய வேண்டும் என்ற கெடு எதுவும் கிடையாது என அறியலாம்.