கணவனுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்
கணவன் மார்க்கத்திற்கு மாற்றம் இல்லாத எந்த ஒரு காரியத்தை கட்டளையிட்டாலும் அதற்கு மனைவி கண்டிப்பாக கட்டுப்பட வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நபி (ஸல்) அவர்கள் “(நான் சூரிய கிரகணத் தொழுகையில் இருந்தபோது) எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் அதிகம்பேர் நிராகரிக்கும் பெண்களாகவே இருந்தனர்” என்று கூறினார்கள்.
அப்போது “இறைவனையா அவர்கள் நிராகரித்தார்கள்?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “கணவனை நிராகரிக்கிறார்கள்; (அதாவது அவன் செய்த) உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்து,
பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் அவள் கண்டு விட்டாளானால் “உன்னிடமிருந்து ஒரு போதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை” என்று பேசிவிடுவாள்” என்றார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி (29)
ஹை‚சைன் பின் மிஹ்ஸன் (ரலி) அவர்களின் தந்தையுடன் பிறந்த சகோதரி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு தேவைக்காக வந்திருந்தார். தேவையை முடித்துக்கொண்ட போது நபி (ஸல்) அவர்கள் அவரிடத்தில் உனக்கு கணவன் இருக்கிறாரா? என்று கேட்டார்கள்.
அதற்கு அவர் ஆம் என்றார். நபி (ஸல்) அவர்கள் அவரிடத்தில் நீ எவ்வாறு நடந்துகொள்கிறாய்? என்று கேட்டார்கள். அதற்கு அவர் என்னால் இயலாமல் போனாலேத் தவிர அவருக்கு நன்மை செய்வதில் நான் குறைவு வைக்கமாட்டேன் என்று கூறினார்.
நீ எவ்வாறு அவரிடத்தில் நடந்துகொள்கிறாய் என்பதை கவனித்துக்கொள். ஏனென்றால் அவர் தான் உனது சொர்க்கமாகும். உனது நரகுமுமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஹ‚ஸைன் பின் மிஹ்ஸன் (ரலி)
நூல் : அஹ்மத் (18233)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒருவர் இன்னொருவருக்கு சிரம்பணியுமாறு நான் கட்டளையிடுவதாக இருந்திருந்தால் மனைவி தன் கணவனுக்கு சிரம்பணியுமாறு கட்டளையிட்டிருப்பேன்.
அறிவிப்பவர் : முஆத் பின் ஜபல் (ரலி)
நூல் : அஹ்மத் (20983)
கணவன் மார்க்கத்திற்கு மாற்றமாக சொன்னால்…
மனைவி கணவனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. அதே நேரத்தில் கணவன் மார்க்கத்திற்கு மாற்றமாக கட்டளையிட்டால் அதற்குக் கட்டுப்படக்கூடாது. இதை பின் வரும் ஹதீஸ்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
அன்சாரிகளில் ஒரு பெண் தம்முடைய மகளுக்கு மணமுடித்து வைத்தார். அவரது மகளின் தலைமுடி உதிர்ந்துவிட்டது. அவள் நபி (ஸல்) அவர்கüடம் வந்து இது குறித்து தெரிவித்துவிட்டு, “என் கணவர், எனது தலையில் ஒட்டுமுடி வைத்துக்கொள்ளுமாறு பணிக்கிறார்” என்று கூறினாள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “வேண்டாம்! (ஒட்டுமுடி வைக்காதே!) ஒட்டுமுடி வைக்கும் பெண்கள் சபிக்கப்பட்டுள்ளனர்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (5205)
அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதில் கீழ்படிதல் கிடையாது. கீழ்படிதல் என்பதெல்லாம் நன்மையில்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அலீ (ரலி)
நூல் : புகாரி (7257)