கணவனுக்குத் தெரியாமல் அவனது பொருளைஎடுக்கலாமா?
கணவன் குடும்பத் தேவைகளுக்குப் போதுமான தொகையை கொடுக்காமல் கஞ்சத்தனம் செய்தால் அவனுக்குத் தெரியாமல் தேவையான அளவு அவனது பணத்தில் மனைவி எடுத்துக்கொள்வது குற்றமில்லை. அப்படி எடுக்கும் தொகை முக்கியமான குடும்பத் தேவைகளுக்காக மட்டுமே செலவிடப்பட வேண்டும்.
முஆவியா (ரலி) அவர்களின் தாயார் ஹிந்த் (ரலிலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம், (என் கணவர்) அபூசுஃப்யான் கஞ்சராகஇருக்கிறார். அவரது பொருளை அவருக்குத்தெரியாமல் நான் எடுத்தால் என் மீது அதுகுற்றமாகுமா? எனக் கேட்டார்கள்.
அதற்கு, உனக்குப் போதுமானதை நியாயமானமுறையில் நீயும் உன் பிள்ளைகளும் எடுத்துக்கொள்ளுங்கள்! என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலிலி) அவர்கள்
நூல் : புகாரி (2211)
கணவனின் பொருளை வீண்விரயம் செய்யாமல் நல்ல வழியில் செலவழித்தால் மனைவிக்கு நன்மை உண்டு.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் தனது வீட்டிலுள்ள உணவைவீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம்செய்த நன்மையைப் பெறுவாள். அதைச்சம்பாதித்த காரணத்தால் தர்மத்தின் நன்மைஅவளது கணவனுக்கும் கிடைக்கும்;
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (22110)