ஒட்டகப்போரின் பின்னணி என்ன?
அலீ (ரலி) அவர்களுக்கும் ஆயிஷா (ரலி) அவர்களுக்குமிடையே நடந்து போருக்கு என்ன காரணம்?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிறகு மூன்றாவது ஆட்சித் தலைவராக இருந்த உஸ்மான் (ரலி) அவர்களைக் கயவர்கள் கொலை செய்தனர். உஸ்மான் (ரலி) அவர்களுக்குப் பிறகு அலீ (ரலி) அவர்கள் ஆட்சித் தலைவராக வருகிறார்கள்.
உஸ்மான் (ரலி) அவர்களைக் கொன்றவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், உடனே அவர்களுக்கான தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் வலியுறுத்தினார்கள்.
ஆனால் அலீ (ரலி) அவர்கள், “இந்தக் கோரிக்கையின் நியாயத்தை நான் நன்றாக உணர்வேன். ஆனால் அதற்குரிய தருணம் இதுவல்ல! குற்றவாளிகள் நம்மை விட அதிக வலிமையுடன் மதீனாவில் உள்ளனர். நிலைமை சற்று நமக்கு சாதகமாக அமைந்தவுடன் நாம் நடவடிக்கையில் இறங்குவோம்” என்று கூறினார்கள்.
இருவருக்கும் இடையில் சரியான புரிந்துணர்வு ஏற்படாத காரணத்தால் போர் மூண்டது.