*ஏழைகளே மறுமையிலும் சிறந்தவர்கள்*

———————————————————-

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: *“நான் சுவர்க்கத்தை எட்டிப் பார்த்தேன் அதில் மிக அதிகமானவர்களாக ஏழைகளைக் கண்டேன். நரகத்தை எட்டிப் பார்த்தேன். அதில் மிக அதிகமானவர்களாகப் பெண்களைப் பார்த்தேன்”*

அறிவிப்பவர் : *இம்ரான் பின் ஹுஸைன்* (ரலி),

நூல் : *புகாரி 3241*

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: *‘பணக்காரர்களுக்கு ஐநூறு வருடங்களுக்கு முன்பாக ஏழைகள் சொர்க்கத்தில் நுழைவார்கள். (ஐநூறு வருடங்கள் என்பது மறுமையினுடைய) பாதி நாளாகும்’*

அறிவிப்பவர்: *அபூஹுரைரா* (ரலி),

நூல் : *திர்மிதி 2276*

ஏழைகள் மறுமையில் முதலில் சுவனம் செல்லக் கூடியவர்கள். *ஏழைகளைத் தவிர வேறு யாருக்கும் இந்தச் சிறப்புகள் இல்லை. இவ்வுலக வாழ்க்கை என்பது அழியக்கூடியது. நிரந்தரமற்றது* என்பதை உணர்ந்து இவ்வுலகில் நமக்கு ஏற்படும் *வறுமை, நோய் நொடிகள் போன்ற சோதனைகளை நாம் நேர்வழி தவறாமல் சகித்துக் கொள்வோம் என்றால் நிச்சயமாக மறுமையில் சுவனம்* என்ற மிகப்பெரும் பேற்றை நாம் அடைந்து கொள்ளலாம்.

*திண்ணை ஸஹாபாக்களின் வாழ்வும் இதற்கொரு சான்றாகும்.*

ஃபழாலா பின் உபைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்தும் போது தொழுகையில் அவர்களோடு நின்ற ஆண்களில் சிலர் *பசியின் காரணமாக (மயங்கி) விழுந்து விடுவார்கள்.* அவர்கள் தான் திண்ணை ஸஹாபாக்கள்.

அவர்கள் (மயங்கி விழுவதைப் பார்க்கும் கிராமவாசிகளில் சிலர் அவர்களின் நிலையை அறியாமல்) *‘இவர்கள் எல்லாம் பைத்தியக்காரர்கள்’* என்று கூறுவார்கள். நபியவர்கள் தொழுகை நடத்தி முடித்து விட்டால் அவர்களை நோக்கித் திரும்பி *‘அல்லாஹ்விடம் உங்களுக்குக் கிடைக்கவிருப்பதை நீங்கள் அறிந்தீர்கள் என்றால் உங்களுடைய ஏழ்மை அதிகரிக்க வேண்டும் என்று விரும்புவீர்கள்’* என்று கூறுவார்கள்.

நூல்: *திர்மிதி 2291*

——————

*ஏகத்துவம்*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *