அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தான் நிர்ரஜீம்
———————————————-
புத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன்

எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா?

எனது விசாரணை என்னவாகும் என்பது தெரியவில்லையே! (இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதா?

எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே!

எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்து விட்டதே எனக் கூறுவான்.

அவனைப் பிடியுங்கள்! அவனுக்கு விலங்கு மாட்டுங்கள்!

பின்னர் நரகில் கருகச் செய்யுங்கள்!

பின்னர் எழுபது முழம் கொண்ட சங்கிலியால் அவனைப் பிணையுங்கள்! (எனக் கூறப்படும்.)

அவன் மகத்தான அல்லாஹ்வை நம்பாதவனாக இருந்தான்.

ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டவுமில்லை.

இன்று இங்கே அவனுக்கு உற்ற நண்பன் எவனும் இல்லை.

சீழைத் தவிர வேறு உணவும் இல்லை.

குற்றவாளிகள் தவிர மற்றவர்கள் அதை உண்ண மாட்டார்கள்.

நீங்கள் பார்ப்பதன் மீதும், நீங்கள் பார்க்காததன் மீதும் சத்தியம் செய்கிறேன்.

இது மரியாதைக்குரிய தூதரின் கூற்றாகும்.

இது கவிஞனின் கூற்று அல்ல. குறைவாகவே நம்பிக்கை கொள்கிறீர்கள்.

இது சோதிடனின் கூற்றும் அல்ல. குறைவாகவ படிப்பினை பெறுகிறீர்கள்.

இது அகிலத்தாரின் இறைவனிடமிருந்து அருளப்பட்டது.

சில சொற்களை இவர் (முஹம்மது) நம்மீது இட்டுக்கட்டியிருந்தால் வலது கையால் இவரைத் தண்டித்திருப்போம்.

பின்னர் அவரது நாடி நரம்பைத் துண்டித்திருப்போம்.

உங்களில் எவரும் அவனைத் தடுப்பவர் அல்லர்.

இது (இறைவனை) அஞ்சியோருக்கு அறிவுரை.

உங்களில் பொய்யெனக் கருதுவோர் உள்ளனர் என்பதை நாம் அறிவோம்.

அது (ஏகஇறைவனை) மறுப்போருக்கு நட்டமாகும்.

இது உறுதியான உண்மை.

எனவே மகத்தான உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக!

[Al Qur’an 69:25-52]
———————————————-

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *