உஹதுப் போரில் நபியை கண்டித்து அல்லாஹ் இறக்கிய வசனம்
நபியவர்கள் உஹதுப்போரில் காயம்பட்டதை இரத்தம் சிந்தியபடி நபியை காயப்படுத்திவிட்டீர்கள். நீங்கள் உறுப்புடுவீர்களா என்றார்கள். அதற்கு அல்ஹவிடமிருந்து கண்டித்து வசனம் இறங்குகிறது.
உஹுதுப் போர் நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய முன்வாய்ப் பற்களில் (கீழ் வரிசையில் வலப்புறப் பல்) ஒன்று உடைக்கப்பட்டது. அவர்களது முகம் காயப்படுத்தப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காயத்திலிருந்து வழிந்த இரத்தத்தைத் துடைத்தபடியே, “தங்களுடைய நபியைக் காயப்படுத்தி, அவரது பல்லை உடைத்த ஒரு சமுதாயம் எப்படி உருப்படும்? அவரோ அவர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்துக்கொண்டிக்கிறார்” என்று கூறலானார்கள். அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “(நபியே!) அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை” (3:128) எனும் வசனத்தை அருளினான்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) ,
நூல்: முஸ்லிம் 3667