உமர் (ரலி) அவர்களும் , அவரது சகோதரியும்
ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய நிகழ்ச்சியில் அன்னாரின் சகோதரி, நீ அசுத்தமானவர், சுத்தமானவர் தான் இதனைத் தொட வேண்டும்; குளித்து சுத்தமாகி வந்த பின் குர்ஆனின் பிரதியைத் தொடு என்று கூறியதும் இக்கருத்தை வலியுறுத்துகின்றது.
(மனாருல் ஹுதா)
உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னால் அவர்களின் சகோதரி அவர்களை நோக்கி, “நீங்கள் அசுத்தமாக இருக்கின்றீர்கள். தூய்மையானவர்களைத் தவிர இதை எவரும் தொடக் கூடாது” என்று கூறினார்கள் என்ற செய்தி முஸ்னத் பஸ்ஸார் என்ற நூலில்279வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இமாம் ஹாகிம் அவர்களின் தொகுப்பிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அறிவிப்பாளர் வரிசையில் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் ஹுனைனி என்பாரும்,உசாமா பின் ஸைத் என்பாரும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் பலவீனமானவர்களாவர்.