உடலை கிப்லா திசை நோக்கி வைக்க வேண்டுமா?‎

இறந்தவர் உடலை கிப்லா திசை நோக்கித் திருப்பி வைக்க ‎வேண்டும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை ‎பலவீனமாக உள்ளன.‎

பெரும் பாவங்கள் யாவை? என்று ஒரு மனிதர் நபிகள் நாயகம் ‎‎(ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் அவை ஒன்பது என்று கூறிவிட்டு,  முஸ்லிமான ‎பெற்றோருக்கு நோவினை அளிப்பது, உயிருள்ளவருக்கும் ‎இறந்தவர்களுக்கும் கிப்லாவாக இருக்கும் கஅபாவின் புனிதத்தை ‎மறுத்தல்  என்பதை அதில் குறிப்பிட்டார்கள்.‎

அறிவிப்பவர்: உமைர் (ரலி)‎; நூல்கள்: அபூ தாவூத் 2490, பைஹகீ 3/408, 10/186, தப்ரானீ 17/47, ‎ஹாகிம் 1/127‎

மேற்கண்ட நான்கு நூல்களிலும் அறிவிப்பாளர் தொடரில் அப்துல் ‎ஹமீத் பின் ஸினான் என்பவர் இடம் பெறுகிறார். இவர் ‎யாரென்று தெரியாதவர். எனவே இது பலவீனமான செய்தியாகும்.‎

பைஹகியின் மற்றொரு அறிவிப்பில் அய்யூப் பின் உத்பா ‎என்பார் இடம் பெறுகிறார். இவர் நினைவாற்றல் குறைந்தவர் ‎என்பதால் இவர் அறிவிக்கும் ஹதீஸ்களும் பலவீனமானவை.‎

இந்தக் கருத்தில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஏதும் இல்லாததால் ‎கிப்லாவை நோக்கி உடலைத் திருப்பி வைக்க வேண்டும் என்பது ‎கட்டாயம் அல்ல.‎

மேலும் மேற்கண்ட ஹதீஸின் கருத்திலும் குழப்பம் உள்ளது.‎

உயிருள்ளவருக்கும், இறந்தவர்களுக்கும் கிப்லா என்று இதில் ‎கூறப்பட்டுள்ளது. உயிருள்ளவருக்கு கிப்லா என்றால் 24 மணி ‎நேரமும் அதை நோக்கியே இருக்க வேண்டும் என்று யாரும் ‎கூற மாட்டார்கள். தொழும் போது கிப்லாவை நோக்க வேண்டும் ‎என்றே புரிந்து கொள்வார்கள்.‎

அது போல் இறந்தவர்களுக்கு கிப்லா என்றால் இறந்தவர் ‎தொழும் போது அதை நோக்க வேண்டும் என்ற கருத்து வரும். ‎இறந்தவருக்கு தொழுகை இல்லை. தொழ முடியாது எனும் ‎போது இறந்தவர்களுக்கு கிப்லா என்பதும் பொருளற்றதாகி ‎விடுகிறது.‎

எனவே நமது வசதிக்கு ஏற்ப உடலை எந்தப் பக்கம் ‎வேண்டுமானாலும் வைக்கலாம்.‎

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed