❌ *பலவீனமானச் செய்தி* ❌
486. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தனக்கு ஹலால் இல்லாத பெண்ணை தொடுவதை விட இரும்பு ஊசியால் தன்னுடைய தலையை காயப்படுத்திக் கொள்வது சிறந்ததாகும்.
அறிவிப்பவர்: மஃகில் பின் யஸார் (ரலி)
حَدَّثَنَا مُوسَى بْنُ هَارُونَ، ثنا إِسْحَاقُ بْنُ رَاهَوَيْهِ، أَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، ثنا شَدَّادُ بْنُ سَعِيدٍ الرَّاسِبِيُّ، قَالَ: سَمِعْتُ يَزِيدَ بْنَ عَبْدِ اللهِ بْنِ الشِّخِّيرِ يَقُولُ: سَمِعْتُ مَعْقِلَ بْنَ يَسَارٍ يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَأَنْ يُطْعَنَ فِي رَأْسِ أَحَدِكُمْ بِمِخْيَطٍ مِنْ حَدِيدٍ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَمَسَّ امْرَأَةً لَا تَحِلُّ لَهُ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-486.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-16910.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் யஸீத் பின் அப்துல்லாஹ்விடமிருந்து அறிவிக்கும் ஷத்தாத் பின் ஸயீத் நம்பகமானவர் என்றாலும் தவறிழைப்பவர் என இப்னு ஹஜர் அவர்களும், அப்துஸ்ஸமத் பின் அப்துல்வாரிஸ் அவர்கள், இவரைப்பற்றி பலவீனமானவர் என கூறியுள்ளார் என புகாரி இமாம் அவர்களும் கூறியுள்ளனர். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப் 1 / 432 , தஹ்தீபுத் தஹ்தீப் 2 / 155)
- மேற்கண்ட செய்தியின் வார்த்தையிலும், நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவித்தும் ஷத்தாத் பின் ஸயீத் தவறு செய்துள்ளார்.
- அபுல் அலாஉ-யஸீத் பின் அப்துல்லாஹ் (ரஹ்) விடமிருந்து பஷீர் பின் உக்பா அறிவிக்கும் போது இந்த செய்தியை மஃகில் பின் யஸார் (ரலி) அவர்களின் கூற்றாகவும், வேறு கருத்திலும் அறிவித்துள்ளார். பஷீர் பின் உக்பா பலமானவர் என்பதால் இவரின் அறிவிப்பின்படி இந்த செய்தி மஃகில் பின் யஸார் (ரலி) அவர்களின் கூற்றுதான் என்று தெரிகிறது. (பார்க்க : முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-17316 )