இஸ்லாமிய பெண்கள் தேர்தலில் போட்டியிடுவதை மார்க்கம் அனுமதிகின்றதா?
அரசியலில் குறிப்பாக தேர்தல்களில் பெண்கள் பங்குபற்றுதல், போட்டியிடுதலைப் பொறுத்தவரை அது ஒரு சமுகத்தின் அல்லது சில பகுதியின் பொறுப்பைச் சுமக்கின்ற ஒரு பணியாகவே பார்க்கப்பட வேண்டியிருக்கின்றது.
ஒருபெண் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவாளானால் அவர் ஒரு மாவட்டத்திலோ, மாநிலத்திலோ & நாட்டிலோ மக்ககளுக்குப் பொறுப்பாளியாக நியமிக்கப்பட்டு அவளிடம் அச்சமூகத்தின் பொறுப்புக்களும் ஒப்படைக்கப்படுவதைக் காணலாம்.
இஸ்லாத்தைப் பொறுத்தவரையும், பெண்களுக்கென உள்ள இயல்பான சுபாவங்களைக் கருத்தில் கொண்டு, வீட்டு நிர்வாகம் தொடக்கம் நாட்டு நிர்வாகம் வரை பொதுத் தலைமைத்துவம் என்றுவரும் போது அது ஆண்களுக்கே கொடுக்கப்படவேண்டும் என இஸ்லாம் கூறுகின்றது.
குறிப்பாக அரசியல் சார் பொறுப்புக்கள் அல்லது தலைமைத்துவம் ஆட்சி அதிகாரம் என வரும்போது இன்னும் இத்தடை வலுப்பெறுகிறது, இதை பின்வரும் வசனங்களை ஆதாரங்களாகக் குறிப்பிடலாம்.
‘….ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்…..’ 4:34
அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்
ஜமல் போர் சமயத்தில், அதில் ஈடுபட்டவர்களுடன் நானும் சேர்ந்துகொண்டு (ஆயிஷா(ரலி) அவர்களுக்கு ஆதரவாகப்) போரிட முனைந்தபோது, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்றிருந்த ஒரு சொல் எனக்குப் பயனளித்தது.
பாரசீகர்கள் கிஸ்ராவின் மகளைத் தங்களுக்கு அரசியாக்கிவிட்டார்கள் எனும் செய்தி இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, அவர்கள் ‘தம் ஆட்சியதிகாரத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைத்த சமுதாயம் ஒருபோதும் உருப்படாது‘ என்று கூறினார்கள்.
(இதுதான் எனக்குப் பயனளித்த நபி(ஸல்) அவர்களின் சொல்.)
ஸஹீஹுல் புகாரி: 4425.
33:33. உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்
ஆனால் அரசியல் தலைவர்களாகின்றபோது அதிகம் வெளியே திரியவேண்டிய
நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது.
•தேவையற்ற ஆண், பெண் கலப்புக்கள்.
•ஆதிகமாக வெளியே திரிய வேண்டிய சூழல்
ஏற்படுவதனால் கணவனின் உரிமைகளை சரியாக நிறைவேற்ற முடியாத நிலை.
•குழந்தைகளை பராமரிக்க வேண்டிய பொறுப்பு பெண்களிடத்தில்
•ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. அப்பொறுப்பை சரியாக நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படுதல்.
•மஹ்ரம் இல்லாமல் தனியே அல்லது வேறு ஆண்களுடன் பிரயாணங்களை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம்.
இப்படிப் பல பிரச்சினைகள் காணப்படுவதனால் பெண்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதே சரியான கருத்தாகும்.