இறைவனுக்குப் பெண் மக்கள் இல்லை\

ஜின்களை அல்லாஹ்வே படைத்திருக்கும் போது அவர்களை அவனுக்கு இணையாக்கி விட்டனர். அவனுக்கு ஆண் மக்களையும், பெண் மக்களையும் அறிவில்லாமல் கற்பனை செய்து விட்டனர். அவனோ தூயவன். அவர்கள் வர்ணிப்பதை விட்டும் அவன் உயர்ந்து விட்டான்.

(திருக்குர்ஆன்:6:100.)

அல்லாஹ்வுக்குப் புதல்வியரைக் கற்பனை செய்கின்றனர். அவன் தூயவன். அவர்களுக்கோ அவர்கள் ஆசைப்படுவது (ஆண் குழந்தை) வேண்டுமாம்!

(திருக்குர்ஆன்:16:57.)

உங்கள் இறைவன் உங்களுக்கு ஆண் குழந்தைகளை வழங்கி விட்டு, தனக்கு வானவர்களைப் புதல்வியராக ஆக்கிக் கொண்டானா? பயங்கரமான கூற்றையே கூறுகிறீர்கள்

(திருக்குர்ஆன்:17:40.)

உமது இறைவனுக்குப் பெண் குழந்தைகள்! இவர்களுக்கு ஆண் குழந்தைகளா? என்று இவர்களிடம் கேட்பீராக! வானவர்களை நாம் பெண்களாகப் படைக்கும் போது அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா? கவனத்தில் கொள்க! அல்லாஹ் (பிள்ளைகளைப்) பெற்றெடுத்தான் என்று அவர்கள் இட்டுக்கட்டியே கூறுகின்றனர். அவர்கள் பொய் கூறுபவர்கள். ஆண் மக்களை விட அவன் பெண் மக்களைத் தேர்வு செய்து விட்டானா? உங்களுக்கு என்ன நேர்ந்தது? எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்?  சிந்திக்க மாட்டீர்களா? அல்லது உங்களுக்குத் தெளிவான சான்று உள்ளதா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் வேதத்தைக் கொண்டு வாருங்கள்!

(திருக்குர்ஆன்:37:149-157.)

அவர்கள் அவனது அடியார்களில் சிலரை (அவனில்) ஒரு பகுதியாக ஆக்குகின்றனர். மனிதன் தெளிவான நன்றி கெட்டவன். அவன் படைத்தவற்றில் பெண் மக்களைத் தனக்கு அவன் ஏற்படுத்திக் கொண்டு உங்களுக்கு ஆண் மக்களைத் தேர்வு செய்து விட்டானா?அளவற்ற அருளாளனுக்கு எதனைக் கற்பனை செய்தார்களோ அது குறித்து (பெண் குழந்தை குறித்து) அவர்களில் ஒருவருக்கு நற்செய்தி கூறப்பட்டால் அவரது முகம் கறுத்து விடுகிறது. அவர் கோபம் கொண்டவராகி விடுகிறார்.. அளவற்ற அருளாளனின் அடியார்களான வானவர்களைப் பெண்களாக அவர்கள் கற்பனை செய்து விட்டனர். அவர்கள் படைக்கப்பட்டதை இவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா? இவர்களது கூற்று பதிவு செய்யப்பட்டு, விசாரிக்கப்படுவார்கள்.

(திருக்குர்ஆன்:43:15-19.)

அவனுக்குப் பெண் குழந்தைகளும், உங்களுக்கு ஆண் குழந்தைகளுமா?

(திருக்குர்ஆன்:52:39.)

உங்களுக்கு ஆண்! அவனுக்குப் பெண்ணா? அப்படியானால் இது அநியாயமான பங்கீடு தான். . அவை வெறும் பெயர்கள் தவிர வேறு இல்லை. நீங்களும், உங்கள் மூதாதையரும் தாம் அந்தப் பெயரைச் சூட்டினீர்கள். இது பற்றி அல்லாஹ் எந்த அத்தாட்சியையும் அருளவில்லை. ஊகத்தையும், மனோ இச்சைகளையும் தவிர வேறு எதையும் அவர்கள் பின்பற்றவில்லை. அவர்களுக்கு அவர்களின் இறைவனிடமிருந்து நேர் வழி வந்து விட்டது

(திருக்குர்ஆன்:53:21-23.)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *