\\*பலவீனமான ஹதீஸ்களை அறிந்து கொள்வோம்….*\\
11998حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ حَدَّثَنَا مَيْمُونٌ الْمَرَائِيُّ حَدَّثَنَا مَيْمُونُ بْنُ سِيَاهٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ مُسْلِمَيْنِ الْتَقَيَا فَأَخَذَ أَحَدُهُمَا بِيَدِ صَاحِبِهِ إِلَّا كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يَحْضُرَ دُعَاءَهُمَا وَلَا يُفَرِّقَ بَيْنَ أَيْدِيهِمَا حَتَّى يَغْفِرَ لَهُمَا رواه أحمد
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இரு முஸ்லிம்கள் சந்திக்கும் போது அவர்களில் ஒருவர் தனது தோழரின் கையைப் பிடிப்பாரானால் அவ்விருவரின் பிரார்த்தனையைக் கவனிப்பது அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது. அவ்விருவருக்கும் பாவமன்னிப்பு வழங்கப்படாமல் அவர்களின் கரங்கள் பிரிவதில்லை.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : அஹ்மது (11998)
இந்தச் செய்தியை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து *மைமூன் பின் சியாஹ் என்பவர் அறிவிக்கின்றார். இவரை சில அறிஞர்கள் நம்பகமானவர் என்றும் சிலர் பலவீனமானவர்* என்றும் கூறியுள்ளனர்.
3706حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ أَبِي يَحْيَى الطَّوِيلِ رَجُلٌ مِنْ أَهْلُ الْكُوفَةِ عَنْ زَيْدٍ الْعَمِّيِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا لَقِيَ الرَّجُلَ فَكَلَّمَهُ لَمْ يَصْرِفْ وَجْهَهُ عَنْهُ حَتَّى يَكُونَ هُوَ الَّذِي يَنْصَرِفُ وَإِذَا صَافَحَهُ لَمْ يَنْزِعْ يَدَهُ مِنْ يَدِهِ حَتَّى يَكُونَ هُوَ الَّذِي يَنْزِعُهَا وَلَمْ يُرَ مُتَقَدِّمًا بِرُكْبَتَيْهِ جَلِيسًا لَهُ قَطُّ رواه إبن ماجه
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : *நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் சந்தித்து பேசினால் அந்த நபர் திரும்பாதவரை நபி (ஸல்) அவர்கள் தன் முகத்தைத் திருப்ப மாட்டார்கள். அவர்களிடம் கைகொடுத்தால் அந்த நபர் அவராகக் கையை விடும் வரை நபி (ஸல்) அவர்கள் தன் கையை எடுக்க மாட்டார்கள்*. அவர்களுக்கு முன்னால் முட்டுக்காலை மடக்கி அமர்பவர் யாரையும் பார்க்கவே முடியாது.
நூல் : இப்னு மாஜா (3706)
இந்தச் செய்தியை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து ஸைத் பின் ஹவாரீ அல்அம்மீ என்பவர் அறிவிக்கின்றார்.
இவரைப் பலவீனமானவர் என்று *யஹ்யா பின் மயீன், அபூஹாதிம், அபூசுர்ஆ, நஸாயீ, அலீ பின் மதீனீ ,இஜ்லீ, அலீ இப்னு அதீ, இப்னு ஹிப்பான்* மற்றும் பலர் கூறியுள்ளனர்.
மேலும் இந்த ஸைத் என்பாரிடமிருந்து இந்தச் செய்தியை அபூ யஹ்யா என்பவர் அறிவிக்கின்றார். இவரும் பலவீனமானவர் என்று யஹ்யா பின் மயீன், அபூஹாதிம், இப்னு ஹஜர் ஆகியோர் கூறியுள்ளனர். எனவே இந்தச் செய்தியும் பலவீனமானதாகும்.
2651حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ وَإِسْحَقُ بْنُ مَنْصُورٍ قَالَا حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ عَنْ الْأَجْلَحِ عَنْ أَبِي إِسْحَقَ عَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ مُسْلِمَيْنِ يَلْتَقِيَانِ فَيَتَصَافَحَانِ إِلَّا غُفِرَ لَهُمَا قَبْلَ أَنْ يَفْتَرِقَا قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ أَبِي إِسْحَقَ عَنْ الْبَرَاءِ وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ الْبَرَاءِ مِنْ غَيْرِ وَجْهٍ وَالْأَجْلَحُ هُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ حُجَيَّةَ بْنِ عَدِيٍّ الْكِنْدِيُّ الترمذي
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : *இரு முஸ்லிம்கள் சந்திந்து கைகொடுத்துக் கொண்டால் அவ்விருவரும் பிரிவதற்கு முன்பாக அவ்விருவரின் பாவங்களும் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை.*
அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)
நூல் : திர்மிதீ (2651)
இந்தச் செய்தியில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்றாலும் இந்தச் செய்தியை பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பாளர் *அபூ இஸ்ஹாக் தத்லீஸ்* என்ற அறிவிப்பாளரை விட்டு அறிவிக்கும் வேலையைச் செய்யக்கூடியவர்.
இவர் பல நபித்தோழர்களைப் பார்க்காமலும், சந்திக்காமலும் உள்ள நிலையில் இடையில் உள்ள அறிவிப்பாளர்களைக் கூறாமல் அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டது போன்ற தோரணையில் அறிவிப்பார். இவரைப் போன்றவர்கள் நான் நேரடியாகக் கேட்டேன் என்று கூறினாலே இவரின் அறிவிப்புக்கள் ஏற்கப்படும்.
ஆனால் இவர் இந்தச் செய்தியில் தான் நேரடியாகக் கேட்டதைத் தெளிவுபடுத்தும் எந்த வாசகத்தையும் எந்த இடத்திலும் கூறவில்லை. இதன் காரணமாக இவருடைய இந்த அறிவிப்பு பலவீனமானதாகும்.
தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 8 பக்கம் 65)