இரண்டு மரணம், இரண்டு வாழ்வு என்பதன் பொருள்
“இருமுறை எங்களை உயிர்ப்பிக்கச் செய்தாய்; இருமுறை மரணிக்கச் செய்தாய் என்று குற்றமிழைத்தோர் மறுமையில் கதறுவார்கள்” என இவ்வசனம் (40:11) கூறுகிறது.
இருமுறை உயிர்ப்பித்தல் என்பது நமக்கு விளங்குகிறது. இந்த உலகத்தில் ஒருமுறை பிறக்கிறோம். மரணித்த பிறகு அழிக்கப்பட்ட பிறகு மறுபடியும் இறைவன் உயிர் கொடுத்து எழுப்புவான்.
ஆனால் ஒருமுறை தான் நாம் மரணிக்கிறோம் எனும்போது இரண்டு முறை மரணிக்கச் செய்தாய் என்று எப்படிக் கூற முடியும்?
இதை திருக்குர்ஆன் 2:28 வசனம் தெளிவாக விளக்குகிறது. மனிதன் படைக்கப்படுவதற்கு முன் இருந்த நிலைமையைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும்போது “நீங்கள் மரணித்தவர்களாக இருந்தீர்கள், உங்களை உயிர்ப்பித்தான்; பின்னர் மரணிக்கச் செய்து மீண்டும் உயிர்ப்பிப்பான்” என்று இவ்வசனத்தில் கூறுகிறான்.
படைக்கப்படாமல் இருந்த அந்த நிலையைத்தான் முதல் மரணம் என்று அல்லாஹ் கூறுகிறான். இதே அடிப்படையில் தான் இருமுறை மரணிக்கச் செய்தாய் என்று குற்றமிழைத்தோர் மறுமையில் கூறுகிறார்கள்