*இமாம்களின் வாழ்க்கைக் குறிப்பு* – 09
||*இமாம் முஸ்லிம்*||
முழுப்பெயர்: முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ் இப்னு முஸ்லிமுல் குஷைரியி (ஸஹீஹுல் முஸ்லிம் என்ற ஹதீஸ் நூலை தொகுத்த இமாம்)
புனைப்பெயர்: அபூஹுஸைனின் நைஸாபூரி அல்ஹாஃபிழ்
இயற்பெயர்: முஸ்லிம்
தந்தைபெயர்: ஹஜ்ஜாஜ்
பிறந்த ஊர்: ஈரானில் உள்ள குராஸான் பகுதியில் உள்ள நைஸாபூரி என்ற ஊரில் பிறந்தார்.
பிறப்பு: ஹிஜ்ரி 204 அல்லது 206
கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: கல்விக்காகத் தனது 14 வயதிலிருந்தே ஈரானில் உள்ள குராஸான், இராக்கிலுள்ள கூஃபா போன்ற ஊர்களுக்கும் இன்னும் ஷாம், ரயீ, எகிப்து, ஹிஜாஸ், நைஸாபூரியை சுற்றி உள்ள பல ஊர்களுக்கும் பயணம் சென்றுள்ளார்
இவர் தொகுத்த நூல்கள்:
ஸஹீஹ் முஸ்லிம்,
அல்குனா வல்அஸ்மா (அறிவிப்பாளார்கள் தொடர்பான நூல்),
அல்முன்ஃபரிதாது வல்வுஹ்தான்,
அத்தபகாத் இன்னும் பல நூல்களை தொகுத்துள்ளார்
இவரது ஆசிரியர்கள்:
அப்துல்லாஹ் இப்னு மஸ்லமதல் கஃனபி, அஹ்மத் இப்னு ஹன்பல், இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ், யஹ்யா இப்னு மயீன், அபூபக்கர் இப்னு அபீஷைபா, அப்துல்லாஹ் இப்னு அப்துர்ரஹ்மானுத்தாரமீ, அப்து இப்னு ஹுமைத், ஹம்மாது இப்னு இஸ்மாயில் இப்னு உலய்யா இன்னும் பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்
இவரது மாணவர்கள்:
முஹம்மது இப்னு அப்தில் வஹ்ஹாப், அபூஈஸா அத்திர்மிதி, ஸாலிஹ் இப்னு முஹம்மது ஸஜ்ரத், அபூஹாதம் அர்ராஸியி, முகம்மது இப்னு அப்து இப்னு ஹுமைத், அபுஅவானதல் அல் இஸ்ஃபிராயினிய்யி இன்னும் பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.
இறப்பு: ஹிஜ்ரி 261ல் ரஜப் மாதம் ஞாயிற்றுக்கிழமை நைஸாபூர் என்ற தனது ஊரில் இறந்தார். அப்போது அவருக்கு 57 வயதாகும்.